உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழனின் பிறந்தகம்

115

பனிமலை கடலுட் பதுங்கியிருந்த தொன்முது பண்டைக் காலத்தில், நாவலந்தீவின் தென்பாகம் உயர்ந்தும் வடபாகம் தாழ்ந்தும் இருந்தன. பனிமலை கிளர்ந்து குமரிமலை நாடு மூழ்கியபின், வடபாகம் உயர்ந்தும் தென்பாகம் தாழ்ந்தும், வடதென் திசைகள் முறையே உத்தரம் தக்கணம் எனப்பட்டன.

ஒ.நோ: கீழ் - கீழ்க்கு - கிழக்கு x மேல் - மேற்கு.

உ (மேல், உயர்) + தரம் = உத்தரம்.

தக்கு = தாழ்வு. தக்குத் தொண்டை = தாழ்ந்த குரல் தொண்டை. தக்கு = தக்கணம் (Deccan).

வலத்தை அல்லது வலதிசையைக் குறிக்கும் தக்ஷண (L. dexter- dexterity) என்னும் வடசொல் தக்ஷ் மூலத்தினின்று பிறந்ததாதலின், வேறு சொல்லாம். மானியர் உவில்லியம்சு சமற்கிருத ஆங்கில அகரமுதலியில் உத்தர (uttara) என்னும் சொல்லைப் பார்க்க.

தமிழ் தெற்கே தோன்றிய மொழியாதலால், தென்மொழி, தென்கலை, தென்னாடு, தென்னிலம், தென்புலம், தென்புலத்தார், தென்பாலி, தென்னகம், தென்பாண்டி, தென்மதுரை, தென்னன், தென்னவன் முதலிய சொல்வழக் கெழுந்தன.

இராமன் தன் கானக வாழ்க்கையில் அகத்தியரைக் கண்டபோது, பின்னவர் முன்னவனை அன்புடன் வரவேற்றதை, கல்வியிற் பெரியவரும் பாவலருள் மாவலருமான கம்பர்,

"நின்றவனை வந்தநெடி யோனடிப ணிந்தான்

அன்றவனு மன்பொடுத ழீஇயழுத கண்ணான் நன்றுவர வென்றுபல நல்லுரைப கர்ந்தான் என்றுமுள தென்றமிழி யம்பியிசை கொண்டான்

55

(கம்பரா. அகத்.

47)

என்று இனித்த தனித்தமிழ்ப் பாவாற் பாடி, தமிழின் கன்னித் தூய்மையை யும், தென்குமரிநாட்டுத் தோற்றத்தையும், என்று மழியாத் தன்மையையும், அகத்தியர் அதைக் கற்றுத் தேர்ந்ததையும் முத்தமி ழிலக்கணம் இயற்றிப் புகழ் பெற்றதையும், ஒருங்கே தெள்ளத் தெரிவித்தார்.

The Tamils Indigenous to South India

"Some writers conduct the ancient Dravidians with the self- confidence of a Cook's guide through the North-western or North- eastern mountain passes of India and drop them with a ready-made foreign culture on the banks of the Kaveri or the Vaigai. The slender evidence on which they rely for this elaborate theorizing is the fact that Brahui, a dialect spoken in the northern corner of India, possesses