உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்படைச் சொற்கள்

3

கண்டத்தைக் குமரிக்கண்டம் என்கின்றோம். குமரிமலை யிருந்த காலம், ஆரியர் என்ற இனமே தோன்றாத தொன்முது பண்டைக் காலமாகும்.

வடமொழியாளர் தமிழன் தொன்மையை முற்றும் மறைத்துத் தமிழை வடமொழியின் வழியதாகக் காட்டல் வேண்டி, பின்வருமாறு குமரன், குமரி யென்னும் இரு சொற்களின் வடிவையும் பொருளையும் திரித்தும் மிகுத்தும் உள்ளனர்.

=

குமரன் குமார் குழந்தை, பையன், இளைஞன், மகன் (இருக்கு வேதம்)

குமரி குமாரீ = சிறுமி, பத்திலிருந்து பன்னீரகவைப் பட்டவள், இளைஞை, மகள் (அதர்வவேதம்)

ரு

இவ் விரு சொற்களையும் ஆரியச் சொல்லாகக் காட்டுமாறு மூலத்தையும் கீழ்வருமாறு திரித்துள்ளனர்.

கு = + மார = எளிதாக இறப்பது.

இப் பகுப்பும் சொற்பொருட் கரணியமும் இயற்கைக்கு மாறாகவும் உத்திக்குப் பொருந்தாமலும் இருப்பதையும், மகன், மகள் என்னும் பொருள் தமிழிலின்மையையும் நோக்குக, இன்றும். 'இந்தச் சுமையைத் தூக்க முடியாத நீ ஒரு குமரனா?' என்று ஓர் இளைஞனை நோக்கி மக்கள் வினவுவதை யும்,“கோடிச் சேலைக்கு ஒரு வெள்ளை, குமரிப்பெண்ணுக்கு ஒரு பிள்ளை’” என்னும் பழமொழி வழக்கையும், ஊன்றி நோக்கி உண்மையை அறிக.

குமரன் குமரி என்னும் சொற்களை வடசொல்லென்று நீக்கிவிடின், வடமொழியாளர் கூற்றை ஒத்துக்கொண்டதாகவும், குமரிமலை மூழ்கியது ஆரிய வருகைக்குப் பிற்பட்டதாகவுமே முடிதல் காண்க.

திரு என்னும் சொல்லின் பல பொருள்களுள், தெய்வத்தன்மை என்பதும் ஒன்று.

எ-டு: திருக்கண்ணப்பர், திருக்குறள், திருவரங்கம், திருவிழா, திருநீறு, திருமணம் முதலிய சொற்களில் திரு என்பது தெய்வத்தன்மைக் கருத்தோடு தூய்மைக் கருத்தையும் உணர்த்தும்.

மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல், திரு. என்று குறுகி நிற்கும்போது முற்றுப்புள்ளி பெற வேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மை யுணர்த்தும் திரு என்னும் சொல்லோடொப்பக் கொண்டு மயங்க நேரும்.

எ-டு: திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்).

திரு. நாவுக்கரசு (பொதுமகன் பெயர்).