உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மதிப்படைச் சொற்கள்

புதுப்புனைவர் கோ. துரைச்சாமி நாயக்கர் (G.K.நாயுடு), பண்டாரகர் (Dr) சாலை இளந் திரையனார்.

5

பேராசிரியர் என்பதைப் பேரா. என்று குறுக்கலாம். சில சொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப் பெறும்.

எ-டு : புலவர் புகழேந்தியார்,

பெரியார் ஈ.வே.இரா.

புகழேந்திப் புலவர்,

ஈ.வே.இராப். பெரியார்.

'அவர்கள்' என்னும் பின்னடையை எவர் பெயருக்கும் பின் குறிக்க லாம். அது எழுதுவாரின் நிலைமையையும் விருப்பத்தையும் பொறுத்தது. அரசினர் வழங்கும் பட்டங்களான அடைச்சொற்களைப் பின் வருமாறு மொழிபெயர்க்கலாம்.

எ-டு: பத்மஸ்ரீ: தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள். செர் (Sir) : வயவர் தியாகராசச் செட்டியார் அவர்கள்

ராஜா செர் (Rajah Sir): அரசவயவர் முத்தையாச் செட்டியார் அவர்கள்.

ராய் பஹதூர்: அரைய ஆண்டகை.

ராவ் பஹதூர்: அராவ ஆண்டகை பவானந்தம் பிள்ளை அவர்கள்.

திவான் பஹதூர்: அமைச்ச ஆண்டகை நாராயணசாமிப் பிள்ளை அவர்கள்.

ராவ் சாஹிப்: அராவ அண்ணல் கோதண்டபாணிப் பிள்ளை அவர்கள்.

அரசியற் பதவிகள் பற்றிய முன்னடைகள்

The Hon'ble

The Rt. Hon'ble

His Worship

His Lordship

His Excellency

His Highness

His Majesty

பெருந்தகை

மா பெருந்தகை வணங்கு தகை குரிசில் தகை மேன்மை தங்கிய உயர்வு தங்கிய மாட்சிமை தங்கிய

மதவியல் பற்றிய முன்னடைகள்

Rev.

Rt.Rev.

His Grace

His Holiness

கனம்

மா கனம்

அருட்டிரு தவத்திரு

“முதன்மொழி" 2.9.1971