உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் வேறு, திரவிடம் வேறு

தெய்வச்சிலையார் கொடுந்தமிழ் நாடுகளைப் பற்றி,

41

பன்னிரு

நிலமாவன........ (பொங்கர் ) நாடு, அருவாவடதலை" என்ப, இவை செந்தமிழ் நாட்டகத்த. செந்தமிழ் நாடென்றமையால், பிற நாடாகல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு: “கன்னித் தென்கரைக் கடற் பழந்தீபம் கொல்லங் கூபகஞ் சிங்களமென்னும் எல்லையின் புறத்தவும், கன்னடம் வடுகம் கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றகம் என்பன குடபாலிருபுறச் சையத்துடனுறைபு கூருந் தமிழ் திரி நிலங்களும், முடியுடையவ ரிடுநிலவாட்சியின் அரசு மேம்பட்ட குறுநிலக் குடுமிகள் பதின்மரும் உடனிருப் பிருவருமாகிய பன்னிருவர் அரசரும் படைத்த பன்னிரு தேயத்தினும், தமிழ்ச் சொல்லாதற்கு விருப்புடையன” என்றமையானும்; "தமிழ்கூறு நல்லுலகத்து, வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின், எழுத்துஞ் சொல்லும் பொருளும் நாடி” என நிறுத்துப் பின்னும் "செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு" ஓதியவதனாற் சிவணிய நிலமாவது எல்லை குறித்த நிலத்தைச் சார்ந்த நிலமென வேண்டுதலானும்; பன்னிரு நிலமாவன;- குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றக மும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும், என்று கொள்ளப்படும்.

என

"இவற்றுள், கூபகமுங் கொல்லமுங் கடல் கொள்ளப்படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக் குடியேறினார் போலும். பஞ்ச திராவிடமெனவும் வடநாட்டார் உரைப்பவாகலான். அவையைந்தும் வேங்கடத்தின் தெற்காதலுங் கூடாமையுணர்க” என உரைத்திருப்பது சாலச் சிறந்ததாகும்.

நச்சினார்க்கினியர் "செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” என்பதற்கு, "செந்தமிழ் நாட்டைச் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும் பன்னிரண்டையும் புறஞ் சூழ்ந்த பன்னிரண்டு நிலத்தும்” எனப் பொருள் கூறி,

“இனிப் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன: சிங்களமும் பழந்தீவும் கொல்லமும் கூபமும் கொங்கணமும் துளுவும் குடகமும் கருநடமும் கூடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமுமாம்." என உரைத் திருப்பது. தெய்வச்சிலையாரைப் பின்பற்றிப் போலும்!

இவ் வுரைகளாலும், திசைச்சொற்கு எடுத்துக்காட்டப் பெற்றவற்றுள், வடுகர் சொல்லுதலைச் செப்புதல் என்றும், கருநடர் அகப்படுதலைச் சிக்குதல் என்றும், துளுவர் மாமரத்தைக் கொக்கு என்றும், குடநாட்டார் தந்தையை அச்சன் என்றும் சொல்வர், என வரும் பகுதிகளானும்; திசைச் சொல் என்பது கொடுந்தமிழ்ச் சொல்லே யென்பதும், அது செந்தமிழ் நிலத்தைச் சூழப் பல திசையினும் வழங்கியதால் திசைச்சொல் எனப்பட்ட