உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செந்தமிழும், கொடுந்தமிழும்

51

இதனாலேயே செந்தமிழையும் கொடுந்தமிழையும் முறையே தமிழும் திரவிடமும் என இடைக்காலத்து இலக்கணிகள் சிலர் வழங்கிவந்தனர். இதனைப் பின்பற்றித் தமிழுக்கினமான மொழிகளையெல்லாம் திரவிட மெனப் பிரித்துக் கூறுவதே சாலப் பொருத்த முடைத்தாம். திரவிடம் என்னும் தொகுதி தமிழை உளப்படுத்தாமையின், அவ் விரண்டையும் ஒருங்கே குறிக்கத் தமிழம் என்னும் சொல்லையே ஆளவேண்டும்.

நூன், நூம், நுங்கள்; யான், யாம், யாங்கள்; நான், நாம், நாங்கள்; நீன், நீம், நீங்கள்; தான், தாம், தாங்கள்; அவன், அவள், அவர், அது, அவை; என மொழிக் கடிப்படையான மூவிடப் பெயர்களும், தமிழில் இயல்பாகவும் ஒழுங்காகவும் இருக்கவும்; தெலுங்கில், நேனு, மேமு; மனமு, நீவு, மீரு; தானு, தாமு; வாடு, அதி(ஆமெ), வாரு, அதி, அவி எனத் திரிந்தும், ஒழுங்கற்றும் இனமிழந்தும் இருத்தல் காண்க. மொழிக்கடிப்படையானவும் பெரும்பாலும் திரியாதனவும் ஓரசைப்பட்டனவும் உலக மொழிகட்கெல்லாம் தொடர்பு காட்டுவனவும் அடிக்கடி சொல்லப்படுவனவும் நிலைத்து வழங்குவனவு மான மூவிடப் பெயர்களே இத்துணைத் திரிபடைந்திருப்பின், வேறு சொற்களைப்பற்றிச் சொல்லவேண்டுவதில்லை. இம் மூவிடப் பெயர்களை ஒரு சோற்றுப் பதமாகவே கொள்க. இங்ஙனம் இயல்பையும் திரிபையும் முறையே தம் சிறப்பியல்பாகக் கொண்ட தமிழையும் திரவிடத்தையும் எங்ஙனம் ஒன்றாக இணைக்கவொண்ணும்?

தமிழ் இயல்பாகவே செம்மையுடைமையின், தமிழ் எனினும் செந்தமிழ் எனினும் ஒன்றே. தமிழின் திரிபாகிய கொடுந்தமிழினின்றும் பிரித்துக் கூறவே செந்தமிழ் எனப்பட்டது, இயல்பான பால் தண்ணீர்ப் பாலினின்றும் பிரித்துக் கூறத் தனிப்பால் எனப்பட்டாற்போல.

தமிழ் ஒன்றே மிகுந்த இலக்கண வரம்புடையது.

66

'கண்ணு தற்பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை

மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?"

என்று பரஞ்சோதி முனிவர் தருக்கிக் கூறியதைத் தமிழரனைவரும், சிறப்பாகத் தமிழ்ச்சைவர், கவனித்துக் காண்பாராக!

எல்லா மொழிகட்கும் பொதுவான எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகிய நான்குமே, தமிழில் மிகுந்த வரம்பும் விரிவும் கொண்டுள்ளன. இனி, பிறமொழிகட் கில்லாத பொருளிலக்கணத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டுவதில்லை. பிறமொழிகளை மக்கள் எங்ஙனமெல்லாம் பேசியும் எழுதியும் வருகின்றனரோ, அங்ஙனமெல்லாம் அவற்றின் இயல்பும் இலக் கணமும் அமைகின்றன. ஆனால், தமிழ் எங்ஙனம் பேசப்படினும், மேடை யேறிப் பேசும்போதும் ஏடெடுத் தெழுதும் போதும் இலக்கண வரம்புட னேயே பேசவும் எழுதவும்பட வேண்டும். இதுவே தென்றமிழுக்கு இலக் கணிகள் இட்ட என்றுமுள வரம்பு. இவ் வரம்புடையதே தமிழ் அல்லது செந்தமிழ்.