உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




9

திசைச்சொல் எவை?

தொல்காப்பியர் தம் காலத் தமிழ்ச் செய்யுட் சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்லென நால் வகைப்படுத்தினார். அவற்றுள், இயற்சொல்லும், திரி சொல்லும் செந்தமிழ் நாட்டுச் சொல்லும், திசைச் சொல் கொடுந்தமிழ் நாட்டுச் சொல்லும் ஆகும். வட சொல் என்றது ஆரியச் சொல்லையும் வட நாட்டுச் சொல்லையும் ஆகும். வடநாட்டுச் சொல்லாவது, பிராகிருதம் என்னும் வட திரவிடச் சொல். அஃது ஆரியத்திற்கு முந்தியது.

அக்காலத்துத் தமிழில் வழங்கிய அல்லது புகுத்தப்பட்ட அயன் மொழிச் சொல் ஆரியச் சொல் ஒன்றே. அதனால் அதைத் திசைபற்றி வட சொல் என்று பிரித்துக் கூறினர். அவ்வாறே இக்காலத்து அயன்மொழிச் சொற்களையும், ஆங்கிலச் சொல், இலத்தீனச் சொல், கிரேக்கச் சொல், சீனச்சொல் என அவ்வம் மொழிப் பெயராலேயே குறித்தல் வேண்டுமே யன்றித் திசைச் சொல்லுள் அடக்குதல் கூடாது.

மேற்குறித்த நால்வகைச் சொல்லும் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்கள் வருமாறு:

இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென் றனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே."

ce

அவற்றுள்,

இயற்சொற் றாமே

(தொல். எச்ச. 1)

செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித்

தம்பொருள் வழாமை இசைக்குஞ் சொல்லே.”

(தொல். எச்ச. 2)

“ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும்

வேறு பொருள் குறித்த ஒருசொல் லாகியும் இருபாற் றென்ப திரிசொற் கிளவி.”

(தொல். எச்ச. 3)

"செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி”

(தொல். எச்ச. 4)

୧୧

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே."

"செந்தமிழ் சேர்ந்த திசைச் சொற் கிளவி”

(தொல். எச்ச. 5)