உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளமும் தமிழும்

65

'பதிற்றுப்பத்து' என்னும் புணர்மொழிப் பெயரோடொத்த ‘முப்பதிற்றுப்பத்து’, ‘அம்பதிற்று நாலு' முதலிய இற்றுச் சாரியைப் புணர்ச்சித் தொடர்மொழிகளும் இன்று மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன.

சில மலையாள நாட்டுத் தென்சொற்கள் முந்து நிலையையே இன்றும் தாங்கி நிற்கின்றன.

எ-டு

-டு: மலையாளம்

தமிழ்

அரி

அரிசி

உள்ளு(உள்)

உண்டு

நல்லு(நல்)

நன்று

எல்

எலும்பு

பருந்து

பரந்து

போழ்

போழ்து

“அரி யெறிஞ்ஞால் ஆயிரம் காக்க”, “கரயுன்ன குட்டிக்கே பாலுள்ளு”, “வம்பனோடு வழுது நல்லு” என்பன மலையாளப் பழமொழிகள்.

||

புரம் = உயர்வு. "புரையுயர் பாகும்" என்பது தொல்காப்பியம் (உரி. 4). புரம் - பரம் = மேல். சொற்றிரிவில் உகரமுதல் அகரமுதலாதல் இயல்பு. எ-டு: முடங்கு மடங்கு, குடும்பு - கடும்பு, குடம் கடம்.

66

பரம்பு - பறம்பு = (உயர்ந்த) மலை. பரண் = மேலிடம். பரந்து - பருந்து உயரமாகப் பறக்கும் பறவை. 'உயரவுயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?" என்னும் தமிழ்ப் பழமொழியும், “பணத்தின்னு மீதெ பரந்தும் பறக்கயில்ல” என்னும் மலையாளப் பழஞ்சொல்லும் இங்கு நோக்கத்தக்கன. பரந்து என்னும் சொல்லின் இடையிலுள்ள அகரம், ஈற்றிலுள்ள உகரச்சார்பால் உகரமாயிற்று. இது உயிரிசைவு மாற்றம் (Harmonious sequence of vow- els) என்னும் நெறிமுறையாம். ஒ.நோ: பரம்பு-பரும்பு. பராந்து, பிராந்து என்னும் உலகவழக்கும் இங்கு நோக்கத்தக்கன .

போழ்-போழ்து-பொழுது-போது. போழ்து-போழ்தம்.

ஒ.நோ: வீழ்-வீழ்து-விழுது.

தமிழிலுள்ள சில இலக்கணச் சொல்வகைகளின் வரன்முறை, மலையாளச் சொற்றுணை கொண்டே அறியமுடிகின்றது.

6T-(b): -டு:

(1) நிகழ்கால இடைநிலை

கின்று' என்னும் நிகழ்கால இடைநிலை, ‘குந்நு’, ‘உந்நு' என்று மலையாளத்திலும், ‘குந்'-‘உந்'(உன்) - 'ந்' என்று தமிழிலும் திரியும்.