உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 49.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

செந்தமிழ்ச் சிறப்பு

எ-டு: இது எந்தாகுன்னு(எந்தாணு)?

இது ஒரு மரமாகுன்னு(மரமாணு). யஃகியா ஹை? What is this?

யஃபேட் ஹை. This is a tree.

இனி, இறுதியாக, மலையாள நாட்டிற் சிறப்பாகவும் சிறப்பான வடிவிலும் வழங்கும் பழமொழிகளிற் சிலவற்றையும், எடுத்துக்காட்டுவாம். மலையாளத்தில் ஏறத்தாழ ஈராயிரம் பழமொழிகள் வழங்கி வருகின்றன. அவற்றுள் ஒரு பகுதி வடசொற் கலந்தது; இங்குக் காட்டப் பெற்றவற்றுள் இரண்டொன்று நீங்கலாக ஏனையவெல்லாம் தூய தென்சொற் பழமொழிகளே. மலையாளத்திற் பழமொழி பழஞ்சொல் எனப்பெறும். முதுசொல் என்பது தொல்காப்பியம்.

அகத்திட்டால் புறத்தறியாம். (அறியாம் = அறியலாம்)

அகத்துக் கத்தியும் புறத்துப் பத்தியும்.

அகலே போன்னவனெ அரிகெ விளிச்சால் அரக்காத்துட்டு சேதம். அஞ்செரும கறக்குன்னது அயலறியும், கஞ்சி வார்த்துண்ணுனது நெஞ்சறியும்.

அடி வழுதியால் ஆனயும் வீழும்.

அரிகே போகும்போழ் அரப்பலம் தேஞ்ஞு போகும்.

அழகுள்ள சக்கயில் சுளயில்ல.

ஆகும் காலம் செய்தது சாகும் காலம் காணும்.

ஆட்டிக்கொண்டு போகும்போழ் பிண்ணாக்கு கொடுக்காத்தவன்

வீட்டில் சென்னால் எண்ண கொடுக்குமோ?

ஆர்க்கானும் கொடுக்கும்போழ் அருதென்னு விலக்கருது.

ஆழமுள்ள குழிக்கு நீளமுள்ள வடி. (வடி = தடி)

இளமான் கடவறியா, முதுமான் ஓட்டம் வல்லா.

ஈர் எடுத்தால் பேன் கூலியோ?

ஈழத்தெ கண்டவர் இல்லம் காணுக யில்ல.

உரத்த பாம்பின்னு பருத்த வடி. (பாம்பின்னு = பாம்பிற்கு

உலக்கெக்கு முறிச்சு குறுவடியாயி.

உள்ளது பறஞ்ஞால் உறியும் சிரிக்கும்.

ஊருண்டெங்கில் உப்புவிற்றும் கழிக்காம்.

எள்ளோளம் தின்னால் எள்ளோளம் நிறயும். (ஓளம் = அளவும்)

ஏதானும் உண்டெங்கில் ஆரானும் உண்டு.