உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

ix

முகவுரை

எனக்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; யன்மை, வியன்மை வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. அதற்குக் கரணியம், (காரணம்), பழம் பாண்டிநாடாகிய குமரிக்கண்டத்தைக் கடல் கொண்டதும், ஆரிய வருகைக்கு முற்பட்டதும் முதலிரு கழகக் காலத்ததுமான பல்துறைப் பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழிவுண்டதும், தமிழ வேந்தர் வேத ஆரியரை நிலத்தேவர் (பூசுரர்) என நம்பித் தம்மையும் தம் இனத்தாரையும் தாழ்த்திக் கொண்டதும், வேதஆரியமும் சமற்கிருதமுமாகிய வடமொழி தேவமொழி என நம்பப்பட்டதும், வாய்மைத் தமிழ்ப்புலவர் வாழ்ககையிழந்ததும், தமிழின் தூய்மை குலைவுண்டதும், தமிழ் வரலாறு மறைவுண்டதும், தமிழ் கோயில்வழிபாட்டிற்குத் தகாதமொழியென்று தள்ளப்பட்டதும், தமிழர தமிழை இகழ்ந்து புறக்கணித்ததும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினையால் தமிழர் சின்னபின்னமாகச் சிதைவுண்டு ஒற்றுமையற்றதும், பேதைமையூட்டும் புராண மென்னும் தொல்கதைகளையே நீளக் கற்றுங் கேட்டும் பகுத்தறி விழந்ததும், அவருள் நூற்றிற்குத் தொண்ணூற்றைவர் தற்குறி களானதும், பிறப்பிழந்த போலித்தமிழர் தொன்றுதொட்டுத் தமிழைக் காட்டிக்கொடுத்து வருவதும், பிற்காலத்தமிழகத்தை அடுத்தடுத்துப் பல்வேறு வேற்றரசர் ஆண்டதும், ஆகும்.

ஒரு

ஆங்கிலராட்சியாலும் ஆங்கிலக் கல்வியாலும், சார்த்தமிழர்க்குக் கண்திறக்கப் பெற்றதின் பயனாக, மறைமலையடிகளின் தனித்தமிழியக்கந் தோன்றித் தமிழ் மீண்டுந் தளிர்த்துத தழைக்கத் தொடங்கிற்று. ஆயின், ஆங்கிலர் நீங்கியபின், ஆரியப்பகை புதிய இந்தித் துணையொடு வந்து அரசியல்வாயிலாகத் தமிழை அடர்த்துவருகின்றது. இதனால், அரசியல்,