உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

தமிழ் வரலாறு

கோயில் என்னும் சொல் உயர்படைந்ததாகவும், பண்டாரம் என்னும் சொல் ஆண்டி என்னும் பொருளின் இழிபடைந்ததாகவும், கொள்ளலாம்.

(2) விரிபு (Extension)

ஒரு சொல் தன் பொருட்கு இனமானவற்றையும் குறிக்குமாறு ஆளப்பெறுவது விரிபாம்.

சொல்

இயற்பொருள்

புதிதாய் விரிவடைந்தபொருள்

கொல்லன்

தச்சன்

தோடு

காதோலை

பொன்

தங்கம்

ஐங்கொல்லருள் ஒருவன்

காதிலணியும் பொன்னோலை, பொற்கம்மல், கற்கம்மல்

கனியம் (metal)

ஊறுகாய்

ஊறும்காய்

ஊறும் காய்கனி கிழங்கு மலர்

(3) வரையறை (Restriction)

ஒரு சொல், தான் குறிக்கக்கூடிய பலபொருள்களுள் ஒன்றற்கே அல்லது அதன் ஒரு கூற்றிற்கே, சிறப்பாக ஆளப்பெறுதல் வரையறையாம்.

சொல்

மனை

யாம்

குறிக்கும்பொருள்கள்

வீடு, மனைவி,

இருவகைத்

வரையறைப்பொருள்

வீட்டுநிலம்

தனித்தன்மைப்பன்மை

நாம்

தன்மைப் பன்மை

இருவகைத்

தன்மைப் பன்மை

பிள்ளை

ஆண், பெண்

உளப்பாட்டுத் தன்மைப்

பன்மை

ஆண் (கொங்குநாடு)

பெண் (பாண்டிநாடு)

மணம், குணம், ஒழுக்கம் என்னும் பொதுச்சொற்களை நல் வகைக்கும், நாற்றம், வீச்சம், வினை என்னும் பொதுச் சொற்களைத் தீய வகைக்கும், வழங்குவதும் வரையறையே.

(4) சிறப்பிக்கை (Specialisation)

பல பொருள்கட்குப் பொதுவான சொல்லை அவற்றுள் தலை சிறந்ததற்கு ஆள்வது சிறப்பிக்கையாம்.