உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

107

அம்மானையும் போன்ற செய்யுள்களும், இயற்றத் தொடங்கினர். மோனையெதுகை யமைப்பும் சொற்சுருக்கமும் பொருட்செறிவும் அவர் உள்ளத்தைக் கவர்ந்ததினால், பல்வேறு பொருள்பற்றிய

பழமொழிகளும் ஒவ்வொன்றா யெழுந்தன.

(4) நால்வகை எழுத்து (தோரா. கி.மு. 12,000)

அன்றாட வாழ்க்கைப் பேச்சும் பண்டமாற்றுரையாட்டும் காதலறிவிப்பும், வாய்மொழியாக நிகழ்த்துவது நேரிலன்றித் தொலைவிற் கூடாமையின், நாளடைவில் நால்வகையெழுத்து முறைகள் ஒன்றன் பின் ஒன்றாய்த் தோன்றின. அவை,

(1) படவெழுத்து (Pictograph), (2) கருத்தெழுத்து (Ideograph), (3) அசையெழுத்து (Syllabary),

(4) ஒலியெழுத்து (Phonetic Characters)

என்பன. எழுத்து என்பதன் முதற்பொருள் படம் அல்லது ஓவியம் என்பதே. எழுதுதல்-வரைதல். இன்றும் படமெழுதுதல் என்னும் வழக்கிருத்தல் காண்க.

(5) எழுதப்பெற்ற இலக்கியம் (தோரா. கி.மு. 11,000)

ஒலியெழுத்துத் தோன்றியபின் கதை, வரலாறு, கணக்கு, அறம், அரசியல், மணவின்பம், போர், மருத்துவம், கணியம், இசை,நாடகம், சமயம், புகழ்ச்சி, வழுத்து முதலிய பலதுறைகள் பற்றிப் பனுவல்களும் எழுந்தன.

இலக்கு என்பது குறி அல்லது குறிக்கோள். மக்கள் வாழ்க்கை யின் சிறந்த குறிக்கோளை எடுத்துக்கூறி, அவரைத் திருத்துவதும் உயர்த்து வதுமே பனுவலின் அல்லது நூலின் நோக்கமாதலின், அவையிரண்டும் இலக்கியம் எனப் பெயர் பெற்றன. இலக்கு+இயம் இலக்கியம்.

=

பண்டை விற்பயிற்சியாளர், முறையே பருப்பொருள், நுண் பொருள், சுழலாப் பொருள், சுழல்பொருள் ஆகிய நால்வகை இலக்கினூடு எய்து பயின்றனர். இவற்றையே,

99

(6 II 600TIT. 56)

"பெருவண்மை சிறுநுண்மை சலம் நிச்சலம் என்று பாரதம் கூறும். பெருவண்மை என்பது மரத்தின் அடி போல்வது; சிறு நுண்மை என்பது மரத்தின் மேலுள்ள சிற்றிலை போல்வது; சலம் நிச்சலம் என்பன மரத் துச்சியில் அமைக்கப் பெறும் திரிபன்றியும் சுழலாச் சக்கரமும் போல்வன.