இயனிலைப் படலம்
111
எ-டு:
வள்-வய்-வயிர்-வயிரம்-வைரம்.
ஓரிரு சொன்முதலில் வரும் அகர உகரம் ஒளகாரமாகவும் எழுதப்பெறும்.
எ-டு: கதுவாலி (= குறுகிய வாலையுடைய பறவையினம்)- கவுதாரி (இலக்கணப்போலி)-கௌதாரி.
னி, அகரத்தையடுத்த யகரமெய்யும் எல்லாவிடத்தும் ஐகார மாகவே எழுதப்பெறும்.
66
'அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்.
எ-டு: வள் (=கூர்மை)-(வய்)-வை = கூர்மை.
எ-டு:
(தொல்.56)
ளகர மெய் யகர மெய்யாகத் திரிவது பெருவழக்கு. கொள்-கோள்-கோய், தொள்-தொய், நொள்-நொய், பிள்-பிய், மாள்-மாய், வெள்-வெய்- வெய்யோன் = வய்ம் ைை
விரும்புகின்றோன். வெய்- வெம்மை=விருப்பம்.
"வெம்மை வேண்டல்.
LD
(தொல். உரி. 36)
-
யகர மெய்யீற்று ஒகர முதற்சொல் ஈரெழுத்துச் சொல்லா யிருந்து அகர முதலாய் மாறின், ஐகார வடிவு பெறும்.
எ-டு: பொள்-பொய் (உட்டுளை)-(பய்)-பை,
அகரத்தை யடுத்த வகரமெய், ஒரு சில சொற்களில் ஔகார மாகவும் எழுதப்பெறும்.
எ-டு: அவ்வியம்-ஒளவியம், கவ்வு-கௌவு, வவ்வால்
வௌவால்
-
ஔவை என்னும் சொல் அவ்வை என்பதன் திரிபேயா யினும், ஒரு புலத்தியாரின் இயற்பெயராதலின், ஒளகார முதலதாகவே எழுதப்படல் வேண்டும்.
அம்மை-அவ்வை-ஔவை.
அவ், அவ்வாறு, சவ்வு, தவ்வு முதலிய சில சொற்களில், அகர மடுத்த வகரமெய் ஔகாரவீறாக எழுதப்படுவதே யில்லை. ஆயின், அய் என்னும் வடிவம் ‘அய்' என்னும் அசையைக் குறித்தாலன்றி, எழுத்துத்தமிழில் நிகழ்தற்கு இடமேயில்லை. இதை நோக்கிப் போலும்,