உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தமிழ் வரலாறு






திருப்பினும், அம் மெய்க்கு மாத்திரையில்லை. தனிமெய்க்கு மாத்திரை அரை.

ஐ ஒள ள என்னும் இருநெடிலும் தனித்து நில்லாதும் அளபெடுக்காதும் சொல்லுறுப்பாய் வரின், ஒன்றரை மாத்திரை யாய்க் குறுகி யொலிக்கும். ஐகாரம் சொல்லிடையில் ஒரு மாத்திரை யாகவுங் குறுகும்.

(2) சார்பெழுத்துகள்

உயிரும் மெய்யும் ஆகிய முதலெழுத்துகளுட் சிலவற்றின் சார்பினால் தோன்றுவன சார்பெழுத்துகள். சார்தல் - ஒன்றை யொன்று அடுத்தல். உயிரினத்தைச் சேர்ந்தவை இரண்டும் மெய் யினத்தைச் சேர்ந்தது ஒன்றும் ஆக, சார்பெழுத்துகள் மொத்தம் மூன்றாம். அவை குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்பன வாகும்.

தொல்காப்பியர் கூறியவாறு இம் மூன்றே சார்பெழுத்துகள். நன்னூலார் உயிர்மெய்யையும் வேறு சில எழுத்துக் குறுக்கங் களையும் அளபெடையையும் சேர்த்துத் தவறாகப் பத்தென விரித்துவிட்டார். உயிர்மெய் உயிரும் மெய்யும் சேர்ந்த கூட்டெழுத் தேயன்றி வேறெழுத் தாகாது. எழுத்துக் குறுக்கங்களை யெல்லாம் சார்பெழுத்தென்று கொள்ளின், ஆய்தக்குறுக்கத்தைச் சார்பிற் சார்பென்று கொள்ளல் வேண்டும். அளபெடை என்பது எழுத் தொலி நீட்டமேயன்றித் தனியெழுத்தாகாது. இவ்வுண்மை களை யெல்லாம் நோக்காது, சார் பெழுத்துத் தொகையைப் பெருக்கி யதற்கு, மாணவரை மயக்குதலன்றி வேறொரு பயனுமின்றாம். குற்றியலிகரம்

அரையளபாய்க் குறுகியொலிக்கும் இகரம் குற்றியலிகரம். அது மூவகையில் தோன்றும்.

(i) யகரத்தோடு புணர்ந்த குற்றியலுகரத் திரிபு.

எ-டு: வரகு + யாது = வரகியாது.

(ii) புணர்ச்சியால் அமைந்த மியா என்னும் முன்னிலையசைச் சொல்.

கேளும் + ஐயா = கேளுமையா-கேளுமியா- கேண்மியா. ஒ.நோ: மருளும்-மருண்ம்.

(iii) மெல்லின இடையின மெய்யீறு யகரத்தோடு புணர்ந்த புணர்ச்சி விளைவு.