132
தமிழ் வரலாறு
சில இடைச்சொற்கள் வினையாகிப் பின்பு பெயராகின்றன. எ-டு: ஒல் (இடை)-ஒலி (பெயரும் வினையும்).
முதற்காலத்தில் ஒல் என்பதே வினையாகவுமிருந்தது. இடை வினை பெயர் என்னும் இம் முறை எல்லாச் சொற்கும் தனிப்பட்ட நிலையில் ஒத்ததன்று. சில இடைச்சொற்கள் நேரடியாய்ப் பெயராகி விடுகின்றன.
எ-டு: எல்ல (எல்லா)-எலுவ-எலுவன் (தோழன்), எலுவை
(தோழி).
எல்லா என்னும் விளியொலி இன்று ஏல, ஏலா என்று வடிவிலும் பொருளிலும் திரிந்து வழங்குகின்றது.
சில சொற்கள் முதலடியிலேயே பெயராகவோ வினையாக வோ தோன்றிவிடுகின்றன.
எ-டு: காகா-காகம், காக்கா-காக்கை (பெயர்). கர-கரை (வினை).
கின்றன.
வ் விருசொல்லும் ஆங்கிலத்தில் நேர்மாறாய் ஆளப்பெறு
நாம் ‘காகம் கரைகிறது' என்கிறோம்; ஆங்கிலரோ ‘The crow caws' என்கின்றனர்.
சில வினைச்சொற்கள் பெயரினின்றே பிறக்கின்றன.
எ-டு:
உள்-உண்
கள்-களி, காதல்-காதலி, தேன்-தேனி
உள் = உள்ளிடம், உண்ணுதல் = உள்ளிடுதல்.
களித்தல் = கட்குடித்தல். தேனித்தல்-இனித்தல்.
நால்வகைச்சொல்
ஆரியர் தென்னாடுவந்து தமிழ் கற்றுத் தமிழாசிரி யரானபின், இயற்சொல், திரிசொல், திசைச்சொல் என்னும் மொழியியல்வகைச் சொற்களொடு வடசொல்லையும் சேர்த்துக்கொண்டது போன்றே, பெயர்ச்சொல், வினைச் சொல், இடைச்சொல் என்னும் இலக்கண வகைச் சொற்களொடும் உரிச்சொல் என்பதைச் சேர்த்து, இருவகை யிலும் சொற்களை நந்நான் காக்கினர்.
உரிச்சொல் என்பது செய்யுட்கேயுரிய சொல். சொல் என்பது சொல் வடிவையுங் குறிக்கும். ஆரியர் அயலாரான தினால், தமக்குத்