உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

141

தம்பி-தம்பின்-தம்பி, இளவல், இளையான், பின்னோன். அக்கை-அக்கைச்சி (அக்கையச்சி), (தமக்கை), தவ்வை (தம் அவ்வை), மூத்தாள், முன்னை, அத்தி-அச்சி.

தங்கை-கை, தங்கைச்சி (தங்கையச்சி), செள்ளை,

இளையாள், பின்னை, பின்னி.

அண்ணன் தம்பி (பொது)-உடன்பிறந்தான்-உடப்பிறந்தான். அக்கை தங்கை (பொது)-உடன்பிறந்தாள்-உடப்பிறந்தாள். அண்ணன் மனைவி-அண்ணி, ஆயந்தி (ஐயன்தேவி), நங்கை, அத்தாச்சி.

அக்கை கணவன்-அத்தான், மாமன்.

மருமகன்-மருமான், மருகன், மணவாளப்பிள்ளை மருமகள்-மருமாள், மருகி, மணாட்டுப்பெண்.

பெண்கொடுத்தோன்-மாமன்.

மாமன்மனைவி-மாமி.

கணவன்-ஆண்மகன், அகமுடையான். கண்ணாளன், கொழுநன், கொண்கன், கொண்டான், நாயகன், மணவாளன்-மணாளன், வீட்டுக்காரன். மனைவி-அகமுடையாள், இல்லாள், நாயகி, பெண்- பெண்டு-பெண்டாட்டி, கண்ணாட்டி,

மணவாட்டி, வீட்டுக்காரி.

கணவன் தம்பி-கொழுந்தன்.

""

""

தங்கை-கொழுந்தி.

அண்ணன்-அத்தான், மூத்தார்.

அக்கை-நாத்தூண், நாத்தூணாள்.

மனைவி அண்ணன்-மூத்த அளியன், அத்தான்

""

தம்பி -இளைய அளியன்.

""

அக்கை-மூத்த அளியாள், அண்ணி

தங்கை-இளைய அளியாள், கொழுந்தி.

ஓரகத்தான்-ஓர்குடி மணாளன், ஓர்குடியிற்கொண்டோன்

(சகலன்).

ஓரகத்தி-ஓரகத்தாள், ஓர்ப்படி, ஓர்ப்படியாள், ஓர்ப்படைச்சி.

தந்தையண்ணன்-பெரியப்பன், மூத்தப்பன், பெரியையா. தந்தை தம்பி-சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டியப்பன்

சின்னையா.

தந்தையுடன்பிறந்தாள்-அத்தை (சின்னத்தை, பெரியத்தை). தாயின் அண்ணன்-பெரியம்மான், மூத்தம்மான்.

தாயின் தம்பி-சின்னம்மான், இளையம்மான் அம்மாண்டார். தாயின் அக்கை-பெரியம்மை, பெரிய தாய்.