இயனிலைப் படலம்
சில சிறப்புவகை யிடப்பெயர்கள்
உரிமை நிலங்கள்
145
காணி அல்லது பற்று-பொதுவூழியம் செய்தவர் குடும்பத் திற்கும், போரில் இறந்த மறவர் குடும்பத்திற்கும் நன்கொடையாகக் கொடுக்கப்பெற்ற முழுவுரிமை
நிலம்.
முற்றூட்டு புலவர் முதலியோர்க்குக்
முழுவுரிமை நிலம்.
இறையிலி-வரிநீக்கப் பெற்ற மானிய நிலம்.
கொடுக்கப்பெற்ற
அறப்புறம்-கல்விச்சாலைகட்கும் மடங்கட்கும் விடப்பெற்ற
இறையிலி.
அடிசிற்புறம்-சோற்றுச்சத்திரத்திற்கு விடப்பெற்ற இறையிலி. கோயிற்புறம்-கோயில் வழிபாட்டிற்கு விடப்பெற்ற இறையிலி. பண்டாரவாடை-குடிகளுக்கு உரிமையான வூர்.
சில வூர்ப்பெயர்கள்
நத்தம்-போரினாற் பாழான வூர்.
குடியேற்றம்-மக்கள் புதியதாய்க் குடியேறிய வூர்.
தங்குமிடங்கள்
பாசறை அல்லது கட்டூர்-போர்க்களத்தருகிற் படைமறவர்க்க மைத்த இலைக்குடில் தொகுதி (War-camp).
பாளையம்-படைகளுடன் பொதுமக்கள் தங்கியிருப்பதும் கடைத்தெருவுடன் கூடியதுமான இடம் (Military Encampment). படைவீடு-படைமறவர் நிலையாக வதியும் இடம் (Cantonment)
தாவளம்-அயலூரில் தங்கியிருக்குமிடம் (Lodging).
நிலப்பாங்குகள்
கரிசல்-களிமண் நிலம்.
சிவல்-செம்மண்நிலம்.
தேரி-பரந்த கடற்கரை மணல் நிலம்.
கல்லாங்குத்து-வன்னிலம்.
முரம்பு-கன்னில மேடு (தென்பாண்டி வழக்கு).