உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

தமிழ் வரலாறு






பல்-பன். எ-டு: பன்னொன்று, பன்னிரண்டு.

பன்-பான். எ-டு: ஒருபான் (ஒருபது), இருபான்(இருபது).

நூறு : நுறு-நூறு=பொடி. நுறு-நுறுங்கு-நொறுங்கு. நூறு (பொடி)எண்ண முடியாததாயிருப்பதால், அதன்

ஆயிரம்

பெயர் முதற்பெருந்தொகையைக் குறித்தது.

அயிர் = நுண்மணல். அயிர்-அயிரம்-ஆயிரம். ஆற்று மணலும் கடற்கரை மணலும் ஏராளமாயிருப் பதால், மணற்பெயரும் ஒரு பெருந்தொகைப் பெயராயிற்று.

"வாழிய....... நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே’

99

(புறம்.9)

"வானத்து வெள்ளிகளையும் கடற்கரை மணலையும் போல் உன் மரபைப் பெருகப் பண்ணுவேன்.” (விவிலிய மொழி பெயர்ப்பு )

"நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்

வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்.

வடுவாழ் எக்கர் மணலினும் பலவே.

99

இலக்கம் : இலக்கு=குறி. இலக்கு-இலக்கம் எண், பேரெண்.

கோடி

(புறம்.55:17-21)

குறி, எண்குறி,

: குடு-குடுமி = உச்சி, தலையுச்சி, ஆடவர் தலை மயிர்க்கற்றை, பறவைச்சூட்டு, மகுடம், மாடவுச்சி, மலையுச்சி, நுனி. குடு-கொடு. கொடுமுடி = மலை யுச்சி. கொடு- கோடி = நுனி, முனை, கடைசி, எல்லை.

கடைகோடி என்னும் வழக்கை நோக்குக. தெருக்கோடி விற்கோடி என்பனவும் முனையைக் குறித்தல் காண்க. கோடி கடைசி யெண்ணாத

லால் அப்பெயர் கொண்டது.

தாமரை, குவளை, நெய்தல், ஆம்பல் முதலிய மலர்ப் பெயர்கள் ஒவ்வோர் இதழுக்கும்; சங்கம் (சங்கு) என்பது ஒவ்வொரு புரிக்கும் (வளைவிற்கும்); ஒரு பெருந்தொகையாக உறையிடல் முறையிலும்; நாடு, வாரணம், வெள்ளம் என்பன பேரளவுபற்றியும்; கணிகம் (நூறுகோடி) என்பது கணிப்புப்பற்றியும்; பல்வேறு அடுக்கிய கோடிப் பெயராயின. எட்டுத் தாமரை கொண்டது ஒரு நாடு.