உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

155

வினையாக வெளிப்படுவதும், வினைப்பெயராற் குறிக்கப்படுவதும் செயற்பண்பாம்.

(6) தொழிற்பெயர் (Verbal Noun)

தொழிற்பெயர் எனினும் வினைப்பெயர் எனினும் ஒக்கும். சிறுவினை பெருவினை என வினை (தொழில்) இருவகைப் படும். வருதல், போதல், உண்டல், உடுத்தல், போன்றவை சிறுவினை; உ உழவு, நெசவு, தச்சு, கல்வி, ஆட்சி போன்றவை பெருவினை.

எல்லாப் பெயர்களும் பின்வருமாறு வெவ்வேறு வகையில் இவ்விரு பாற்படும்.

(1) பொதுப் பெயர் X சிறப்புப் பெயர்

பல பொருட்குப் பொதுவான பெயர் பொதுப்பெயர்; ஒன்றற்கே சிறப்பாக வுரியது சிறப்புப் பெயர்.

எ-டு: ஆறு, நகர், புலவன்-பொதுப்பெயர் (Common Noun)

காவிரி, மதுரை, நக்கீரன்- சிறப்புப் பெயர் (Proper Noun)

அரசன் அல்லது வேந்தன் என்னும் பெயரை நோக்க. பாண்டியன் என்பது பொதுவிற் சிறப்பும், நெடுஞ்செழியன் என்னும் பெயரைநோக்க, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் என்பது சிறப்பிற் சிறப்பும் ஆகும்.

(2) இயற்பெயர் X ஆகுபெயர்

இயல்பாக ஒரு பொருட்கு உண்டான பெயர் இயற்பெயர்; ஒரு பொருளின் பெயர் இன்னொன்றற்கு ஏதேனுமொரு தொடர் பில் ஆகி வருவது ஆகுபெயர்.

எ-டு: காளை (மாடு), பொன் (கனியம்), வற்றல்(வினை)-

இயற்பெய ர்.

காளை (மறவன்),பொன்(பொற்காசு), வற்றல்

(வற்றிய காய்கனி)-ஆகுபெயர் (Metonymy, Syn

(3) தனிநிலைப்பெயர் X குழூஉப் பெயர்

ecdoche)

ஒரு தனிப்பட்ட பொருளின் பெயர் தனிநிலைப்பெயர்; பல பொருள் சேர்ந்த கூட்டத்தின் பெயர் குழூஉப்பெயர்.

டு: காய், ஆடு, தமிழன் -தனிநிலைப்பெயர்

குலை, மந்தை, கழகம் -குழூஉப் பெயர் (Collective Noun)