இயனிலைப் படலம்
159
செய்யுன்னு என்னும் நிகழ்கால வினைமுற்று வடிவம், இன்றும் பழஞ்சேரநாட்டுத் தமிழ்த் திரிபாகிய மலையாளத்தில் வழங்குகின்றது.
3ஆம் நிலைப்பட்ட செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்று, மலையாளத்திற்போன்றே தமிழிலும் இருதிணை ஐம்பால் மூவிடப் பொதுவினையாயிருந்து, பின்பு தன்மை முன்னிலையிடங்கட்கும் பலர்பாற் படர்க்கைக்கும் விலக்கப்பட்டது.
3ஆம் நிலையிற் பாலீறு பெறாதிருந்த முக்கால முக்கால வினை முற்றுகள் 4 ஆம் நிலையில் அவற்றைப் பெற்றன.
எ-டு :
இ.கா.
.
செய்தான்
செய்தாள்
செய்தார்
செய்தது
செய்த
நி.கா.
எ.கா.
செய்கின்றான்
செய்வான்
செய்கின்றாள்
செய்வாள்
செய்கின்றார்
செய்வார்
செய்கின்றது
செய்வது
செய்கின்ற
செய்வ
செய்தான் என்பது செய்தனன் என்னும் வடிவுங் கொள்ளும். செய்தனன் என்பதிலுள்ள அனன் என்னும் ஈற்றை அன் + அன் என்று பிரித்து, முன்னதைச் சாரியையாகவும், பின்னதைப் பாலீறாகவுங் கொள்வர். இங்ஙனம் கொள்ளாது அனன் என்பதே ஓர் ஈறென்று கொள்ளினும் பொருந்தும். அன்னன், அன்னவன், அன்னான் என்னும் சொற்கள் அத்தகையன் என்று மட்டுமன்றி அவன் என்றும் பொருள் படும். ஆதலால், அனன் என்பதே ஈறாகவு மிருக்கலாம்.
எ-டு : இ.கா.
எ.கா.
நி.கா.
செய்தனன்
செய்கின்றனன்
செய்வனன்
செய்தனள்
செய்கின்றனள்
செய்வனள்
செய்தனர்
செய்கின்றனர்
செய்வனர்
செய்தன்று
செய்தன
செய்கின்றன
செய்வன
'நினைவனள்' என்னும் கலித்தொகைச் சொல்லையும் (44), ‘பார்ப்பனப்பக்கம்' என்னும் தொல்காப்பியத் தொடரையும் (1021) நோக்குக.
செய்தனது என்றிருக்கவேண்டிய ஒன்றன்பால் இறந்தகால வினைமு ற்று, இன்னோசைபற்றிச் செய்தன்று எனத் தொக்கது. னகரம் தகரத்தோடு புணரின் றகரமாம். அனது என்பது ஓர்