உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

171

தனியேவல் போன்றே பன்மடி யேவல்களும் வினைமுதனிலை யாக அமையும்.

எ-டு: வருவித்தான், போக்குவிப்பித்தான்

(4) உடன்பாட்டுவினை x எதிர்மறைவினை

வினை நிகழ்ச்சியை உள்ளதாகக் குறிக்கும் வினை உடன் பாட்டு வினை; இல்லதாக மறுக்கும் வினை எதிர்மறை வினை.

எ-டு: வா, வந்தான், உண்டு-உடன்பாடு (Affirmative or Positive verb)

வராதே, வந்திலன், இல்லை-எதிர்மறை (Negative verb) (5) செயப்படுபொருள் குன்றிய வினை x செயப்படுபொருள் குன்றாவினை

இவை முறையே செயப்படுபொருள் கொள்வதும் கொள்ளா

ததுமாம்.

எ-டு: நடக்கிறான், வருகிறான்-செ. பொ. குன்றியவினை (Intransitive verb)

செய்கிறான், உண்பான்-செ. பொ. குன்றாவினை (Transitive verb)

(6) தன்வினை x பிறவினை

ஒருவன் தானே செய்வது தன்வினை; பிறனைக் கொண்டு செய்விக்கும் வினை பிறவினை.

எ-டு: வந்தான், கற்றான்-தன்வினை

6

வருவித்தான், கற்பித்தான்-பிறவினை (Causal or Causative Verb)

வருவித்தான், கற்பிப்பித்தான்-பன்மடிப் பிறவினை

(7) செய்வினை x செயப்பாட்டுவினை

வினைமுதலே எழுவாயாய் நின்று ஒன்றைச் செய்தலைக் குறிக்கும் வினை செய்வினை; செயப்படுபொருள் எழுவாயாகி வினைமுதலால் தான் ஏதேனும் செய்யப்படுதலைக் குறிக்கும் வினை செயப்பாட்டுவினை.

எ-டு: நாய் சோற்றைத் தின்கிறது-செய்வினை (Active Voice) சோறு நாயால் தின்னப்படுகிறது செயப்பாட்டு வினை (Passive Voice)

மறைமலையடிகள் இற்றைத் தமிழைத் தூய்மைப்படுத்தினார்கள் - செய்வினை