உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

தமிழ் வரலாறு






5. வினைமுற்றின்பின் தான் என்னும் இடைச்சொல். எ-டு: வருவான்தான்.

.

இது சென்னைவழக்கு; அத்துணைச் சிறந்ததன்று. 6. வினைமுற்றின்பின் மன்ற என்னும் இடைச்சொல். எ-டு: “மடவை மன்ற

இது செய்யுள் வழக்கு.

(14) அருள்வினை

(நற். 94)

இறைவனும் முற்றத் துறந்த முழுமுனிவரும் செய்யும் செயலைக் குறிக்கும் வினை அருள்வினை. இது இறந்த கால வினையெச்சத்துடன் அருள் என்னும் துணைவினை சேர்ந்து

வரும்.

எ-டு:

எழுந்தருளினார், சொல்லியருளினார் திருவாய்மலர்ந்தார், திருவுருக்கரந்தார்

என்பவற்றைத் திருவினை என்னலாம்.

(15) உதவிவினை

இறந்தகால வினையெச்சத்துடன் ஈ, தா, கொடு என்னும் வினைகளுள் ஒன்றுசேர்ந்து, இலவசச் செயலைக் குறிப்பது உதவி வினையாம்.

எ-டு: சென்றீ, வந்தீ, சொல்லித்தா, எழுதிக்கொடு. எழுதிக்கொடுத்தல் கைம்மாறு கருதின் மற்பொருட்டு வினையாம்.

(16) ஆர்வவினை (Desiderative Verb)

வினைநிகழ்ச்சியின்மீது ஆர்வங்காட்டும் வினையாம். இது அறுவகையில் அமையும்.

வினை ஆர்வ

1. ஏன் என்னும் இடைச்சொல்லொடு புணர்ந்த ஏவல் வினை. எ-டு: வாருங்களேன்.

2. வேண்டும் என்னும் துணைவினையொடு கூடிய தொழிற் பெயர் அல்லது அகரவீற்று வினையெச்சம்.

எ-டு:

3. தன்மை வாழ்த்து.

தாங்கள் எங்கள் இல்லத்திற்குத் தப்பாது வரல் வேண்டும். இறைவ, நீ எங்ஙனமும் எனக்கு அருளவேண்டும்.

எ-டு: யான் வாழ்க!