உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

தமிழ் வரலாறு

நாட்டு வரலாறு அந் அந் நாட்டின்மேற் பற்றும் நடுநிலையும் உள்ளவரால் எழுதப்படின் பெரும்பாலும் மெய்யாயிருக்கும்; வேற்றினப் பகைவராலும் தன்னினக் கொண்டான்மாராலும் (Quis- lings) எழுதப்படின் பெரும் பாலும் பொய்யாயிருக்கும். தமிழ்நாட்டு வரலாற்றாசிரியருள் P.T. சீநிவாசையங்காரும், இராமச்சந்திர தீட்சிதரும், T.R. சேசையங்காரும் தவிரப் பிறரெல்லாரும் பெரும் பாலும் ஆரியச் சார்பானவரும் நடுநிலை திறம்பிய வருமாதலின், கிறித்துவிற்குப் பிற்பட்ட வரலாற்றைப் பெரும்பாலும் உள்ள படியும், முற்பட்ட வரலாற்றை முற்றும் திரித்தும் எழுதியிருக் கின்றனர். இதற்குக் கரணியம், கிறித்துவிற்கு முற்பட்டது பெரும் பாலும் ஆரியக் கலப்பு இல்லதாயும், தமிழர்க்குப் பெருமை தருவதாயும், பிற்பட்டது ஆரியக் கலப்பு உள்ளதாயும் ஆரியர்க்கே பெருமை தருவதாயும் இருப்பதே.

எழுதப்படா வரலாற்றை எழுதுவதற்குப் பயன்படும் சான்றுகள் இலக்கியம், வெட்டெழுத்து(Inscriptions) பழம் பொருள் நூல்கள்(Arch-aeology) என மூவகைப்படும். இலக்கியத்துள் தொல்காப்பியமும் இரண்டொரு புறநானூற்றுச் செய்யுள் களும் திருக்குறளும் தவிர மற்றப் பண்டைத்தமிழ் நூல்களெல்லாம் அழியுண்டு போனமையால் கிறித்துவிற்கு முற்பட்ட தமிழ்நாட்டு வரலாற்றை எழுதுவதற்கு வேண்டிய இலக்கியச் சான்று இல்லாதே போயிற்று; இதுபோதுள்ள வெட்டெழுத்துகள் பெரும்பாலும் கி.பி.4ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையாதலின் அவையும் இனி, பழம்பொருட் கலையோவெனின் கற்காலத்து இரும்புக் காலத்துப் பருப்பொருட் செய்திகளைத் தவிர, ஒழுங்கான வரலாற்றிற்குரிய நுண்குறிப்புகளைத் தெரிவிக்காததா யிருப்பதாலும், அதையும் ஆராய்தற்குரிய முதற்காலத் தமிழகமாகிய பழம்பாண்டிய நாடு(குமரிக்கண்டம்) முழுதும் முழுகிப் போனமை யாலும், அதுவும் பயன்படாததே. ஆகவே, எஞ்சிநிற்கும் ஒரே சான்று மொழியே.

பயன்படவில்லை.

தமிழ், ஆரியர் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே குமரிக்கண்டத்தில் தானாகத் தோன்றி முழு வளர்ச்சி யடைந்திருந்த மொழியாதலின், மொழிகளின் தோற்றம் வளர்ச்சி திரிபு உறவு முதலியவற்றை விளக்கும் மொழிநூலின் துணைக் கொண்டே, தமிழின் இயல்பையும் பழந்தமிழ் நாட்டு வரலாற்றை யும் ஒருவாறு அறிய முடியும்.

3. தமிழ் தோன்றிய இடம்

தமிழன் பிறந்தகம் முழுகிப்போன குமரிக்கண்டம் என்பது, முக்கழக (முச்சங்க) வரலாற்றாலும். சிலப்பதிகார அடியார்க்கு