உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

தமிழ் வரலாறு





186

பாவாணர் பொன்மொழிகள்

மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே! மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!

மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே! மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே! துறைநகரால் கடல்வணிகம் தோற்றியவன் தமிழனே! பிறநிலத்து வணிகரையும் பேணியவன் தமிழனே! தொன்மையொடு முன்மை; தொன்மையொடு நன்மை; தாய்மையொடு தூய்மை; தழுவிளமை வளமை.

பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே! பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே! பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே! பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே!

பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே! பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே!

இருதிணைக்கும் ஈந்துவக்கும் இன்பமுற்றான் தமிழனே! ஈதலிசை யாவிடத்தே இறந்தவனும் தமிழனே!

கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே! கலப்படையால் குணத்தீவைக் காத்தவனும் தமிழனே!

பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி

மிகுத்ததனால் உண்டோ பயன்?

தமிழயரத் தாழ்ந்தான் தமிழன் அவனே

தமிழுயரத் தானுயர்வான் தான்.

தமிழா உன்றன் முன்னவனே தலையாய் வாழ்ந்த தென்னவனே அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே.

தமிழ் வரலாறு