உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

தமிழ் வரலாறு

விரவுப்பெயரால் சாத்தன் சாத்தி யென்றழைப்பதும், இன்றும் தென்பாண்டி வழக்காம்.

5. பாண்டிநாட் டுலகவழக்கில் வேறெங்கும் வழங்காத தூய தென்சொற்களும், மரபுகளும் (Idioms), வழக்காறுகளும் (Usages), இணைமொழிகளும் (Words in Pairs), தொடர் மொழிகளும் (Phrases), பழமொழிகளும் (Proverbs) ஏராளமாய் வழங்குகின்றன.

காடைக்கண்ணி குதிரைவாலி முதலிய தவசங்களும் கரம்பைப் பயறு, கற்பயறு முதலிய பயறுவகைகளும், அங்குத்தான் விளைக்கப் பெறுகின்றன.

ளத்தல், உணத்துதல், இளவட்டம், ஏத்தாப்பு, கரட்டை காணம், காயல், காம்புதல், கிண்ணுதல், கிளியஞ் சிட்டி, குடிமகன், குண் டியன், குணட்டுதல், குதாவடை, குந்தக்கம், கெந்தளிப்பு, சவங்கல், சவுத்தல், சில்லான், சிலையோடுதல், சீயான், சேடா, தக்கனை, தடையம், தவ்வல், தவத்துதல், தாயமாட்டம், திகைதல், துப்புரவு, தேரி, நலவு சொல்லுதல், நோங்குதல், பண்ணையார், பத்தநடை, பதவல், பரிதல்(ஓடுதல்), பரும்பு பறம்புதல், பாடுபடுதல் (பயிரிடுதல்), புதுநிறம், புல்லை, பூட்டன், பொண்டான், மயிலை, மானை, மெத்துதல், வடலி, வதியழிதல், வள்ளிதாய்(முழுதும்), வாழ்க்கைப்படுதல், வாழ்வரசி என்பன போன்ற நூற்றுக் கணக்கான சொற்கள் நெல்லை வழக்கிற்குச் சிறப்பாகும். ஆதலால், தமிழைச் செவ்வையாய் அறியவேண்டின் பாண்டி நாட்டுலகவழக்கை ஆராய்தல் வேண்டும். இற்றைத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் சன்னைத் தமிழையும் சோழ கொங்கு நாட்டுத் தமிழையுமே அறிந்ததினால், செந் தமிழைப் பிறழவுணர்ந்துள்ளனர்.

தமிழர் குமரிக்கண்டப் பழங்குடி மக்கள் என்பதற்குப் பண்டைத் தமிழிலக்கியச் சான்றுகள்:

(1) (தென்)மதுரை

தலைக்கழகம் இருந்த இடம் தென்மதுரை யென்னும் தொன்

மதுரையாகும்.

"தலைச்சங்கம் இடைச்சங்கம் கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச் சங்க மிருந்தார்........தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப” என்பது இறையனாரகப் பொருளுரை (ப.6).

ல் 'தமிழ்வளர்த்தது' என்றிராது 'தமிழாராய்ந்தது' டைச்சங்கமிருந்தார்.....

என்றிருப்பது ஊன்றிக் கவனிக்கத்தக்கது.