உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

9

வடகோடியடுத்துக் குமரிமுனைக்குச் சற்றுத்தெற்கிலிருந்த ஒரு காவிரிபோலும் பேராற்றிற்கும், பொதுப்பெயராம். காவிரிப் பூம்பட்டினம் முழுகியபின்பும் காவிரியாறிருப்பதுபோல், கபாட புரம் முழுகியபின்பும் குமரியாறிருந்தமை "வடவேங்கடந் தென் குமரி” என்னும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரஅடியாலும்,

ம்

"தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்

99

99

"குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி (புறம். 6:67) என்னும் புறப்பாட்டடிகளாலும் அறியப்படும். அடியார்க்கு நல்லார் உரையில் “தடநீர்க்குமரி வடபெருங் கோட்டின் காறும்” என்பது, அகன்ற நீர்ப்பரப்பையுடைய குமரியாற்றின் வடபெருங் கரைவரை, என்று கோளா லும்

பொருள்படுவது. ஆகவே, முக்கடல் முழுக்கப்பட்ட தமிழ் நிலப்பரப்பை யெல்லாம் தொகுத்துக் கூறுவது அவருரையென்றறிக.

இங்ஙனம், மறுக்கவொண்ணாத தெளிவான பண்டைத் தமிழிலக்கியச் சான்றுண்மையால், குமரிக்கண்டத்தில் தமிழ ரிருந்த தில்லையென்றும் அவர் வடக்கிருந்து வந்தவ ரென்றும், சில தமிழ்ப் பகைவரும் போலித்தமிழருங் கூறுவதைப் பொருட்படுத்தற்க.

"மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப் புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் (கலித். 104) என்னும் கலித்தொகை அடிகளும் குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியாகிய பழம் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டதையும்; இடைக் கழக விருக்கையாகிய அலைவாயையும்(கபாடபுரத்தையும்) கடல் கொண்ட பின், அதற்குத் தப்பிய பாண்டியன் நெல்லை மதுரை முகவை மாவட்ட மாவட்டங்களாகிய பிற்காலப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றி யாண்டதையும் உணர்த்தும்.

ான்

மேற்காட்டிய இலக்கியச் சான்றுகளால், முதற்காலத்தில் நாவலந்தேயம் முழுவதையும் பாண்டியன் ஒருவனே ஆண்ட என்பதும் குமரிக்கண்டம் முழுகாத பிற்காலத்தில், பாண்டியன் குமரிக் கண்டத் தமிழ் நிலத்தையும் சேர சோழர் அதற்கு வடக் கிலுள்ள நாவலந்தேயப் பகுதியின் மேல்பாகங்களையும் ஆண்டார் என்பதும் உணரப்படும்.

தமிழனின் பிறந்தகம் குமரிநாடென்பதை அறியாத மேலை யறிஞர், ஆரியத்தையும் அதன் முதிர்ச்சியான சமற்கிருதத்தையும்