உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

தமிழ் வரலாறு

குலம்(சூரிய வமிசம்) பழஞ் சோழக் கிளையும் ஆகும். முசுகுந்தன், மாந்தாதா, சிபி முதலியோர் தென்னாட்டுச் சோழர் குடிக்கும் வடநாட்டுக் கதிரவக் குலத்திற்கும் பொது முன்னோராகச் சொல்லப் படுதல், இவ்விரு குடிகளும் ஒரே குலத்தைச் சேர்ந்தமையாலேயே. சிபியின் வழியினன் ஆதலாலேயே சோழன் செம்பியன் எனப் பட்டான். பிற்காலத்துத் தெலுங்கச் சோடர்(சோழர்) மொழிபற்றிப் பிரிந்து போனது போன்றே, முற்காலத்துக் கதிரவக்குல வடவரசரும் மொழியும் சேய்மையும்பற்றிப் பிரிந்து போயினர் என்க.

நாரதனை மூவுலகு முலாவி(திரிலோக சஞ்சாரி) என்றது சேர சோழபாண்டிய நாடுகள்பற்றியே. உலகம் என்பது முதலாகு பெயராய் நாட்டையும் குறிக்கும்.

இத்துணைப் பழைமை வாய்ந்த சேர சோழ பாண்டியக் குடிப் பெயர்கள், தமிழாயன்றி வேறு மொழியாயிருத்தல் முடி யாது. ஆயினும், ஆரிய வெறியர் இந்திய நாகரிகத்தை ஆரியமாகக் காட்டல்வேண்டி, மூவேந்தர் குடிப்பெயரையும் வடநாட்டுத் தொடர்புகொண்ட வடசொல்லாகக் காட்டி வருகின்றனர்.

பாண்டியன்

பாண்டியன் என்பது மூவேந்தருள்ளும் முந்தியவன் பெயர். பழம் பாண்டிய நாடே தமிழன் பிறந்தகம். குமரிக்கண்டம் தென் கோடியி லிருந்ததினாலேயே, அதை யாண்ட பாண்டியன் தென் னவன் எனப்பட்டான்.

L

பாண்டியன் என்பது பண்டு என்னும் சொல்லினின்று திரிந்த தென்றும், பழைமையானவன் என்னும் பொருள் காண்ட தென்றும், சொல்வதுண்டு. பாண்டியன் மூவேந்தருள் மட்டு மன்றிப் பிறவரசரை நோக்கியும் பழைமையானவனே. மோகூர்த் தலைவனும் பாண்டியன் படைத்தலைவனுமாகிய ஒரு சிற்றரசனும் பழையன் என்று பெயர்பெற்றிருந்தான். ஆயினும், இப் பொருட்கரணியம் அத்துணைப் பொருத்த மாய்த் தோன்ற வில்லை.

பாண்டி என்பது காளையைக் குறிக்குஞ் சொல். அது பாண்டில், பாண்டியம் என்னும் வடிவுங்கொள்ளும். ஒரு மறவனைக் காளை என்பது மரபு. அதனால். அது சிலர்க்கு இயற்பெயராகவும் இடப்படும். வலிமை, மறம், உழைப்பு, பொறுப்பு முதலிய அருந் திறங்கள் வாய்ந்த காளை போன்றவனைக் காளையென்றல் உவமையாகு பெயர். ஒரு நாட்டைக் காக்கும் அரசனுக்கு இக் குணங்கள் இன்றியமை யாதவை. ஆதலால், பொருட்பாலில் அரசியற் பகுதியில் இடுக்கணழியாமை என்னும் அதிகாரத்தில்,