உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

கிரிச்சு,சள்,சளார்,

தமிழ் வரலாறு

கலகல, கிண், கணீர், கிரிச்சு, சள், சளார், சலசல, திண், மடக்கு, விச்சு, வீர் என்பனவும், இவை போன்ற பிறவும், ஒப்பொலிகளே. இவை

வை இன்று ஒலிக்குறிப்புச் சொற்கள் எனப்படும். ஓக்களி- ஓக்காளம், உமட்டு-உவட்டு, குறட்டை, சப்பு, துப்பு, தும்மு, விக்கு, முக்கு, இசி, சிரி முதலியன ஒப்பொலி யடிப்படையிற் பிற்காலத்துப் பிறந்த சொற்களாம்.

இனி, வாயொலியின்றி வாய்வழியும் மூக்குவழியும் செவிப்புல னாகும் காற்றுமட்டும் வெளிவரும் செயல்கட்கும், ஒப்பொலி முறையில் சொற்கள் தோன்றியுள்ளன.

எ-டு: ஆ-ஆவி, ஊ-ஊது, மூசு-மூச்சு.

கொட்டாவி விடும்போது ஆவென்றும், நெருப்பெரிக் கவும் விளக்கணைக்கவும் சூடான பொருளை ஆற்றவும் நோவு தீர்க்கவும் ஊதும்போது ஊவென்றும் ஒலித்தற்கேற்ப, வாயினின்று காற்று வெளி வருதலும்; உரக்க மூச்சு விடும்போதும் இளைக்கும் போதும், மூசு என்று கேட்குமாறு மூக்கினின்று காற்று வெளிவருதலும்; காண்க.

ஆவித்தல் = கொட்டாவி விடுதல், பெருமூச்சு விடுதல், வாய் விடுதல்.

ஆவி

கொட்டாவி, உயிர்ப்பு, நெட்டுயிர்ப்பு,உயிர், ஆதன் (ஆன்மா), நீராவி, புகை, நறுமணம், உயிரெழுத்து.

ஊதுதல் ஊதுவது போல் துருத்தியால் காற்றெழுப் புதல், ஊதிய துருத்தியும் பையும் போல் வீங்குதல், பருத்தல், மிகுதல், வண்டு குழலூது வது போல் இசைத்துக்கொண்டு தேனை நுகர்தல், ஊதுகுழல்போல் வண்டு மரத்தைத் துளைத்தல். ஊது-ஊதி. ஊது-ஊதிலி

=

மகுடி, விளையாட்டூதி.

து-ஊதியம் (இலாபம்). செலவினும் மிகுந்தது ஊதியம். ஊது-ஊத்து-ஊத்தம்,

ஊது-ஊதாரி = துகளை ஊதித் துடைத்தல் போல் செல்வத்தை வீண் செலவிட்டுப் போக்குபவன்.

-

- நோ:

blow the expense to spend recklessly.

blow = to squander, spend (sum) recklessly.

ஊது-ஓது.ஓதுதல் = காதிற்குள் மெல்லச் சொல்லுதல்.

மூசுதல் = உரக்க மூச்சுவிடுதல், மூச்சுவிடுதல், மோப்பம் பிடித்தல், முகர்தல்.