உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 5.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

(குள்)-(குட்டு)-கிட்டு. கிட்டுதல் = நெருங்குதல்.

(சுள்)-(செள்)-செறு. செறுத்தல் = செறிதல்.

67

செறு-செறி.

துல்-துன். துன்னுதல்

=

நெருங்குதல். துன் - துன்று. துன்றுதல்

=

நெருங்குதல்.

(நுள்) - நள் - நண். நள்ளுதல் = நெருங்குதல், கூடுதல். நண்ணுதல் = நெருங்குதல்.

(நுள்) - (நெள்) - நெரு - நெருங்கு.

-

முல் - முள் - முரு மரு - மருவு. மருவுதல்

=

கிட்டுதல்.

முல் - மல் - மலி - மலிதல் = நெருங்குதல். நிறைதல். மிகுதல். (முள்) - (மள்) - மண்டு. மண்டுதல் நெருங்குதல், கூடுதல்.

மண்டு

-

=

மண்டகம் = மக்கள் கூடும் காரைக்கூடம். மண்டகம்

மண்டபம்-(வ.) மண்டப.

ஒ-நோ: வாணிகம்-வாணிபம்.

5. பொருந்துதல், கூடுதல், ஒத்தல்

உல்-உ

உத்தல்=பொருந்துதல். உத்தி=விளையாட்டில் இருவர் சேர்ந்து வரும் சேர்க்கை, அறிவிற்குப் பொருத்தமான இலக்கண நெறிமுறை.

உல்-ஒல். ஒல்லுதல்=பொருந்துதல். ஒல்-ஒன்.

ஒன்னுதல் = பொருந்துதல். ஒன்-ஒன்று.

ஒன்றுதல் = பொருந்துதல். ஒல்-(ஒள்)-ஒண். ஒண்ணுதல் = பொருந்துதல். ஒள்-ஒட்டு. ஒல்-ஒ. ஒத்தல் = பொருந்துதல்.

குல்-குலவு. குலவுதல் = கூடுதல்.

குல்-(குள்)-கள். கள்ளுதல் = ஒத்தல், கூடுதல்.

கள்ள

=

போல. கள்-களம் = கூட்டம் கூடுமிடம். ஏர்க்களம், போர்க்களம், அவைக்களம் என்பவற்றை நோக்குக. (குள்)-குழு - குழுவு. குழு குழுமல் = கூட்டம்.

-

குழு-குழும்பு = திரள். குழு குழாம்

=

கும்பல்.

(குள்) - (கூள்) - கூண்டு - கூடு - கூட்டம்.

(சுள்) - செள் - செரு - சேர்.

துல் - துல்லியம் = ஒப்பு. துல் - துலை = - ஒப்பு.