உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

2

நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு

"தந்தைதாய்ப் பேண்” என்ற முறையில், ஒவ்வொருவனும் தன் தாய் மொழியையும் தாய்நாட்டையும் பேணக் கடமைப்பட்டவன். தாய்மொழி யைப் பேணுதலாவது, அதிற் பற்று வைத்தலும் அதனை வளர்த்தலும் அழியாமற் காத்தலுமாம். சொல் வளப்படுத்தலும் இலக்கிய வளப்படுத்தலும் வளர்த்தலாகும். இலக்கிய வளப்படுத்தல் புலவர்க்கே இயல்வது; ஏனைய பொதுமக்கட்கும் இயல்வன.

இற்றை யுலகில் தாய்மொழியைப் பேணாமைக்குத் தலைசிறந்தது தமிழ்நாடு. தாய்மொழியை ஒரு கட்சியொடு தொடர்புபடுத்துவதும், தாய் மொழியைத் தாழ்மொழியென்று தூற்றி, வேற்று மொழியைத் தேவமொழி யென்று போற்றுவதும், தாய்மொழியைப் பேணுவானுக்கு 'மொழிவெறியன்' என்று பட்டஞ் சூட்டுவதும், அவனை அலுவலினின்று அகற்றுவதும், தாய் மொழி யிசையும் தாய்மொழியில் வழிபாடும் தகாதனவென்று மேடையில் அமைச்சர் சாற்றுவதும், தாய்மொழிச் சொல்லை வேற்று மொழிச் சொற்கும் தாய்மொழியையே வேற்று மொழிக்கும் மாற்றுவதும், இத் தமிழ்நாட்டில்தான் நிகழும்.

இத்தகைய நிலையில், தமிழுக்கு அயலாரால் ஊறு நேர்ந்தவிடத்து அரிமாபோல் அஞ்சாமல் எதிர்ப்பாரும், காரியோத்துப்போல் காட்டிக் கொடுப்பாரும், இருதலைமணியன்களாய் இங்குமங்கும் கலப்பாரும், 'எங்கெழிலென் ஞாயிறெமக்கு' என்று ஏதுமுணர்ச்சியற்றிருப்பாருமாய்த் தமிழாசிரியர் நால்வகையர். இவருள் நாவலர் பாரதியார் தலைவகையர் (முதல் வகுப்பார்).

1. மொழித்தொண்டு

6

இச் சென்னை மாகாணத்தில் திரு. இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சராகி முதன்முதல் கட்டாய இந்தியைப் புகுத்தியபோது, தாய் மொழியுணர்ச்சியுள்ள தமிழரிடையே பெருங் கொதிப்பெழுந்தது. அதனால் இந்தியெதிர்ப் பியக்கம் தோன்றிற்று. அதை எதிர்க்கட்சியார் செயலென எளிதாய் அடக்கிவிடப் பார்த்தார் ஆச்சாரியார். ஆயின், கட்சிச் சார்பற்ற தமிழ் மாணவரும் ஆசிரியரும் அதிற் பெருந்தொகையினராய்க் கலந்