உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு கே.கே.சா அவர்கட்குப் பாராட்டு

27

வேதமொழியுந் தமிழுங் கலந்ததே, சமற்கிருதம் என்னும் அரைச் செயற்கை யான இலக்கிய வகைமொழி (Semi-artificial literary dialect) யாகும். பிராகிருதம் முந்திச் செய்யப்பட்டது; சமற்கிருதம் (சங்கிருதம்) கலந்து செய்யப்பட்டது. இவ் வியல்பை அவற்றின் பெயர்களே தெரிவிக்கும். சமற்கிருதம் ஒருகாலும் பேசப்பட்ட மொழியன்று. இனியேனும் பேசப்படும் மொழியுமன்று. புல்லுருவியும் உண்ணியும்போல், வழக்கு மொழிகளைச் சார்ந்தே அது வழங்க முடியும்.

தொடர்பில்லாத்

தனிமொழிகளை

வரலாற்று முறையிலும், தொடர்புள்ள இனமொழிகளைக் கொடிவழி முறையிலும், (Geneological method) ஆராய்வதே அறிவியல் முறைப்பட்டதாகும். அம் முறையில் ஆராயின், சமற்கிருதம் தேவமொழி யென்றும் பிராமணர் நிலத்தேவ ரென்றும் கூறும் ஈராரிய (நூற்) கூற்றுகளின் ஏமாற்றும் வெட்டவெளியாகி விடுமென்றே பிராமணரும் அவரடியாரும் வண்ணனை மொழிநூலை போற்றிவருகின்றனர்.

"

ஏற்றுப்

பிராமணர் பெரும்பாலும் தமிழுக்கு மாறாயிருப்பதால், அவரைக் கொண்டு தமிழை ஆராய்வது, பாலுக்குப் பூனையையும், ஆட்டுக்கிடைக்கு ஓநாயையும் காவல் வைப்பது போன்றதே யாகும். (To set the fox to keep the geese.) தென்மொழி வடமொழிப் பிணக்கைத் தீர்க்க அவரை நடுவராக அமர்த்துவது ஆட்டுக் குட்டிக்கும் நரிக்கும் இடைப்பட்ட வழக்கைத் தீர்க்க, ஓர் ஓரியை அமர்த்துவது போன்றதே (A fox should not be of the jury at a goose's trial)

தமிழர் பிராமணருக்குப் பிறப்பால் தாழ்ந்தவரென்று கடந்த மூவாயிரம் ஆண்டாக ஆரிய நூல்கள் பறையறைந்து வந்ததனாலும், தமிழ மூவேந்தரும் அதை ஏற்று ஆட்சிக்குக் கொண்டுவந்தமையாலும்,

பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”

(குறள். 972) என்று திருவள்ளுவர் பாடி ஈராயிரம் ஆண்டான பின்பும்; ஆங்கிலர் நடுநிலையாட்சியும், ஆங்கில அறிவியற் கல்வியும் ஒன்றரை நூற்றாண்டும், நயன்மைக் கட்சியின் (Justice party) திரவிடர் முன்னேற்றத் தொண்டும், மறைமலையடிகளின் தனித்தமிழ்த் தொண்டும் கால் நூற்றாண்டும், பெரியாரின் பகுத்தறிவுத் தொண்டு அரை நூற்றாண்டும், நடைபெற்ற பின்பும்; பகுத்தறிவு, தன்மானம், நெஞ்சுரம் ஆகிய மூவகக் கரணவியல்பும், பேராசிரியர் உட்பட இற்றைத் தமிழருள் நூற்று மேனி தொண்ணூற்றுவர்க்கு இல்லவே யில்லை.

எல்லா நாடுகளிலும் நாட்டையும் மொழியையும் காட்டிக் கொடுக்கும் இரண்டகர் இருக்கவே யிருக்கின்றனர். ஆயின், அவரின் வெற்றித் தொகை