உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

(11) வரிசையறிதல்

சென்ற மாதச் 'செல்வி' யிதழில், “கழக நூலாசிரியர் இருவருக்கு மதுரைக் காமராசர் பல்கலைக்கழக விருது” என்னும் கட்டுரைத் தலைப்பு என் கண்ணைக் கவர்ந்தது. கட்டுரையில் “கழக நூலாசிரியர்களான, உரைவேந்தர் சித்தாந்தக் கலாநிதி வித்துவான் ஔவை சு. துரைசாமிப் பிள்ளை, தமிழ் ஆராய்ச்சியறிஞரான மயிலை சீனி. வேங்கடசாமி ஆகிய புலவர் பெருமக்கள் இருவருக்கும் கடந்த 29-3-80 அன்று, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் சிறப்புப் பட்டத்தினை வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பாராட்டியது.... விருதினைப் பெற்றதன் மூலம் புலவர் இருவரும் மதுரைப் பல்கலைக் கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராயினர்.” என்று மட்டும் இருந்தது.

பொற்பதக்கம்

குறிப்புமில்லை.

பற்றியோ

பொருட்கொடை

பற்றியோ ஒரு

பண்டைக்காலப் புலவர் பெருமக்கள், ஐந்நூறு ஊர் முற்றூட்டும், நாற்பது நூறாயிரம் பொன்னும், ஒரு நாட்டு முழு வருவாயும், நூறாயிரம் பொற்காசொடு ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரம் பொற்காசொடு ஒரு நாடும், இன்னோரன்ன பிறவும், அரசரிடம் பரிசாகப் பெற்றனர்.

இக்காலத் தரசு, ஓய்வு பெற்ற ஏழைப் புலவர்க்கு, மாதந்தோறும் முன்பு 100 உருபாவும் இன்று 250 உருபாவும் ஆக உதவித்தொகை அளித்து வருகின்றது. அஃதொடு ஒரு பாவலர்க்குப் பத்தாயிரம் உருபா நன்கொடை யும் நல்கியுள்ளது.

பண்டைப் புலவரெல்லாரும் பாவலராகவே யிருந்தனர். அவர்க்குப் புலமையும் பாவன்மையும் ஒருங்கே யமைந்திருந்தன. இக் காலத்தில் ஒரு சிலரே பாவலர். அவருட் பெரும்பாலோர் புலவரல்லர். உணர்ச்சியேயூட்டும் பாவன்மையினும் அறிவு புகட்டும் புலமையே சாலச் சிறந்தது.

புலவர் புலத்துறைபற்றிப் பலவகையர்; ஆற்றல்பற்றிப் பல திறத்தர். இயலர், இசையர், நாடகர், கணியர், மருத்துவர் முதலியோர் பலவகையர்; நாவலர், பாவலர், விளக்கியர், தருக்கியர், நூல்வலர், உரைவலர், ஆய்வலர், கதைவலர், கட்டுரைவலர் முதலியோர் பலதிறத்தர். இவ் விரு சாராரும், மீண்டும், தலையர், இடையர், கடையர் என முந்நிலையர்.