உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

பாவாணர் நோக்கில் பெருமக்கள் மூவரும் தத்தம் இயல்பிற்கேற்பப் பேசினர். அதுவும் அவர் குற்றமன்று; அவரை அமர்த்தினவர் குற்றமே.

அன்று பெருஞ்சித்திரன் என்னும் துரைமாணிக்கம், மாணிக்கத்தை யும் சிறிது உரைத்து மாசுபோக்கும் முறையில் இறுதியிற் பேசியிராவிடின். ஆராய்ச்சியில்லாத இளைஞரும் பொதுமக்களும் நடுநிலையறிஞர் வாயினின்று உண்மை தெரிந்து கொள்ளும்வரை, என் 'திருக்குறள் தமிழ் மரபு' உரையைச் சற்றுத் தாழ்வாகவே கருதியிருக்கலாம். ஆயின், அதன் பின்பும் பண்டாரகர் வ. சுப. மாணிக்கனார், பெருஞ்சித்திரன் வரைந்த பெருஞ்சித்திரத்தைக் கலைப்பதுபோன்றும். துரைமாணிக்கம் வீசிய பேரொளியை மறைப்பது போன்றும் வேண்டாத சில சொல்லித் தம் முன்னுரையின் சிறப்பைக் கெடுத்துக் கொண்டது மிகமிக வருந்தத் தக்கதாகும்.

நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்குநல்லார், பரிமேலழகர் முதலிய பண்டையுரையாசிரியரின் உரைகளைப் பன்முறை படித்துணர்ந்து பயன்பெற்றபின், அவ் வுரைகளெல்லாம் தேவையற்றவை என்று கூறுவது நன்றியறிவின்பாற்படாது; உண்மை நவிற்சியுமாகாது. அவ் வுரைகள் வென்பார் அவற்றைப் பாராதே தமிழ் இலக்கண விலக்கியங்களைப் படித்துப் பொருளுணர்ந்திருத்தல் வேண்டும்.

வேண்டாதன

பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொலோ டவ்வேழ் நிலத்தும்"

(1336)

என்று தொல்காப்பியங் கூறுவதால், தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே கூர்ங்கண்ணும் எஃகுச் செவியும் நுண்மாண் நுழைபுலமுங் கொண்ட குமரிநாட்டுத் தமிழ்மக்கட்கும் உரை வேண்டியிருந்ததென்பது புலனாம். ஆதலால், உரைத்துணையின்றி மூலத்தையே படிப்பவர், மூலநோயாளிகள் என்னுமளவு பலவிடத்தும் பொருளுணராது இடர்ப்படுவர் என்பது தேற்றம்.

இனி, அறிவையன்றிப் பட்டம், பதவி, செல்வம், கட்சிச்சார்பு முதலியவற்றை அளவையாகக் கொண்டு ஒரு புலவனையும் அவன் நூல்களையும் மதிப்பதும், அறியாமையின்பாற்பட்டதே யென்று அறிந்து கொள்க.

“தென்மொழி" கும்பம் 1970