உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர்

53

ஒருங்கே நிகழக்கூடியவை யென்றும், மக்களுள்ளும் ஒருசாரார் தேவரா யிருத்தலொண்ணு மென்றும், மண்ணுலகமும் அவர்க்கு விண்ணுலகமே யென்றும், கூறியுள்ளார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்”,

"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து”,

(50)

(413)

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து",

(353)

ஆரா வியற்கை யவாநீப்பின் அந்நிலையே

பேரா வியற்கை தரும்”,

(370)

முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும்”,

(388)

ஐயப் படாஅ தகத்த துணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல்"

என்னுங் குறள்கள் இதற்குச் சான்று பகரும்.

2. பல்வகைப்பட்ட மக்களொடு பழகியறிந்தவர்

(702)

திருவள்ளுவரைக் காணவும் கண்டுரையாடவும் புலவர் பலர் அவ்வப்போது அவர் இல்லம் வந்திருப்பர். மாலை நேரம் மயிலைக் கடற்கரை யோரம் உலாவப் போந்தவிடத்து, வழக்கமாகவும் புதிது புதிதாகவும் பலர் தலைக்கூடி அளவளாவியிருப்பர். கருத்தொத்த புலவர் பிரிவின்கண் மனம் வருந்தியதையும், அறிவிலாப் பேதையர் பிரிவின்கண் மனம் வருந்தாதிருந்ததையும்,

உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்”,

"பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன் றில்”

என்னுங் குறள்களாலும்,

(394)

(839)

ஓர் உண்மையை எத்துணை விரிவாகவும் தெளிவாகவும் விளக்கி

யும் தான் கொண்டதே கோலமென்று வலித்த முரண்டன் ஒருவன் செய்தியை,

୧୧

காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாந் தான்கண்ட வாறு”

என்னுங் குறளாலும் குறித்திருக்கலாம்.

(849)