உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

91

16. தொல்காப்பியச் சீர்மை

தொல்காப்பியத்தில் தோய்ந்தவர் பாவாணர். இலக்கண வுரை வழுக்கள் எனப் பலவழுக்களைச் சுட்டியவர் அவர். அவ்வழுக்கள் தொல்காப்பியத்துக் கண்டவையுமாம். தொல் காப்பியப் பதிப்பாசிரியராய்க் குறிப்புரை வழங்கியும் தொண்டு புரிந்துள்ளார். தொல்காப்பிய வகுப்புகளைப் புலவர்களுக்குதம் தொடர்ந்து நடாத்தியும் அழுந்தியுள்ளார். அவர்காணும் தொல் காப்பியப் பார்வையின் சீர்மை அவர்தம் கடிதங்களில் படடொளி செய்கின்றமை எண்ணி எண்ணி மகிழவும் போற்றவும் தக்கனவாம். 'மொழியாராய்ச்சியும் உலக வரலாற்றறிவும் இல்லாதவர்

தொல்காப்பியத்தைத் தெளிவாய் உணரமுடியாது

66

"" 1

'தொல்காப்பியத்தைப்பற்றிப் பொதுமக்கட்கு விளக்க மாய்த் தெரியுமுன் புலவர்க்கும் தமிழாசிரியர்க்கும் தெரிதல் வேண்டும். மரபியலில் அற்றைத் தமிழர் வாழ்க்கை ஓரளவு சொல்லப் பட்டுள்ளது. அதைச் சொல்ல அன்று நேரமில்லை. புலனெறி வழக்கம் என்பது குறைந்தது ஒருமணி நேரம் விளக்க வேண்டிய பொருள். அதை அன்று தொடங்கித்தான் விட்டு விட்டேன். தொல்காப்பியத்தில் இடைச்செருகல் இருப்பதாகச் சிலர் கருதினர். கருதுகின்றனர். அது ஆராய்ச்சியில்லாதார் செயலே. தமிழுக்கு வேண்டாததும் ஆரியச் சார்பானதுமான பலசெய்திகள் தொல்காப்பியத்தில் சொல்லப்பட்டுள.. தொல் காப்பியர் ஆரியரா? தமிழரா? என்பது மற்றொரு வினா? வழுக்களும் குறையும் தொல்காப்பியத்தில் பலவுள. இவற்றை யெல்லாம் நடுநிலையாக மொழிநூல் துணை காண்டு தான் அறியவொண்ணும். தமிழுக்கு இதுபோது அடிமணை யாக இழுப்பது தொல்காப்பியமே. ஆதலால் அதுபற்றித் தமிழாசிரியரும் தமிழன்பரும் தெளிவாய்த் தெரிந்து கொள்ளல் வேண்டும்.-

1. 8-8-66 (மி.மி.சி)

2. 13-2-64 (மி.மு.சி.)