உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

அந்நூலை வெளியிடும் பொறுப்பையும் மேற்கொண்ட பெருமகனார் கழக ஆட்சியாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி எம்.ஏ., பி.லிப்., அவர்கள் ஆவர். அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன்! அச்சூர்தி ஏறாத அஞ்சல்கள் அச்சூர்தி ஏறிக் கருவிநூற் பெருமையும் பெறுகின்றதேயன்றோ!

இத் தொகுப்பைச் செய்து வரும்போதே பாவாணர் வரலாறு வரைதற்கும், வேறிரு நூல்கள் எழுதுதற்கும் வேண்டும் குறிப்புகளையெல்லாம் தொகுத்து வைத்துள்ளேன். அவையும் விரைவில் ஒவ்வொன்றாய் வெளிவரும் என்பதையும் முந்துற உரைத்து நிறைவிக்கின்றேன்.

1940இல்

'வேர்ச்சொல் சுவடி என ஒரு சிறுநூல் எழுதி முடித்தார் பாவாணர். அந்நூல், இதுகாறும் அச்சிடப் பெற்றிலது. பாவாணர் கடிதங்களைத் தொகுக்கும் முயற்சியில் தலைப்பட்டு, கழக மேனாள் ஆட்சியாளர் தாமரைச் செல்வர் அவர்களின் காப்பகப் பேழையுள் தேடுங்கால் 'வேர்ச் சொல் சுவடி' கிடைக்கப்பெற்றுக் கழிபேரின்பம் நல்கிற்று! அது, கிழங்கு தோண்டி எடுத்தற்கு முனைந்த வறிஞன் ஒருவன் கையில், வளமார்ந்த வைப்புப் புதையல் வாய்த்ததாயிற்று!

66

அயரா முயற்சி மேற்கொண்டால், பாவாணர் வரைந்து முடித்துப் பெயர் சுட்டும் அளவில் நின்றுபோன சுவடிகளும் கட்டுரைகளும் கிடைக்கக் கூடும்” என்னும் ஆர்வமும் தளிர்ப்ப தாயிற்று! பாவாணர் பற்றுமையர் ஒருங்கொத்து உதவத் தலைப்படின், எய்தாதவை யெல்லாம் எய்தி இணையிலா நலப்பாடாம் என்பது உறுதியாம். திருவருள் கூட்டிவைப்பதாக!

தமிழ்ச்செல்வம்

பாவாணர் ஆராய்ச்சி நூலகம் திருநகர், மதுரை - 625006.

தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன்

14-1-'85