உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

279

10. சொல்வளம்

தனித்தமிழ் இதழ்

வடசொற்கும் தென்சொற்கும் வேறுபாடறியாது சாதி, புசித்து என்று வடசொற்களையாண்டு கொண்டு தனித்தமிழ் இதழ் நடத்திவருவது எத்துணை நகைப் பிற்கிடமான செய்தி.

ஆங்கிலநேர் தென்சொற்பட்டி - குறிப்பு

1.

2.

3.

4.

5.

6.

7.

வி.அ.க. 20.3.64

சொற்கள் அகரவரிசைப்படியில்லை. அச்சிடுங்கால் அவ்வரிசைப் படுத்திக் கொள்க.

பெயர்ச்சொல், வினைச்சொல், பெயரெச்சம், வினையெச்சம் எனச் சொல் வகை குறிப்பது நன்று. அவற்றைப் பெ (n) பெ.எ. (adi),வி (v)வி.எ. (adv) என்னுங் குறுக்கங்களாற் குறித்துக்கொள்க.

பட்டி நீண்டிருப்பதாலும் எல்லாச் சொல்லும் உடனடியாய் ளப்பெறவேண்டுமாதலாலும் பாவையிற் பகுதி பகுதியாய் வெளியிடாது அனைத்தையும் ஒருசிறு சுவடியாகவே வெளி யிட்டுவிடுக.

சாக்குப் போக்குச் சொல்லாது அச்சுச்பிழையின்றி வெளியிடுக. மெய்ப்புத் திருத்த எழுவர் இருத்தல்வேண்டும்.

வடமொழி வரலாறு வெளியீட்டில் ஆழ்ந்திருப்பதால் மும்மாதம் பொறுத்துத் தான் கட்டுரை வரையவொன்ணும், இச்சொற்பட்டியே முந்நாள் கொண்டு விட்டது.

என் தமிழியக்கம் தொடங்கும்போது தமிழன்பரெல்லாம் தமிழ்ப் பெயரே தாங்கநேரும்.

திரு. பக்தவச்சலனார் காலநிலைமையே இன்றும் தமிழ்க்குள்ளது. வி.அ.க. 19.7.67