உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

305

சிவநெறி

கிறித்தவ நெறியிற் பிறந்து வளர்ந்தே னாதலால் சிவ நெறியாரின் இறுதிச் சடங்குகள் பற்றி ஒன்றும் அறிந்திலேன். அக்கம் பக்கத்திலுள்ள முதியரை வினவித் தெரிந்து கொள்க. வாழைக்கு என்றும் ஈரம் இருக்க வேண்டும்.

இறைவன் போதிய மழை அருள வேண்டுகிறேன்.

சிவநெறி

க.பெ. சி. 6.12.74

கணவன் மனைவியர் இல்லற வாழ்க்கை இருபகட்டொரு சகடு போன்றது. அதாவது இரட்டை மாட்டு வண்டியை ஒத்தது. இரு காளைகளும் ஒரு முகமாக இழுத்தால்தான் வண்டி செல்லும். அதுபோல் கணவன் மனைவியர் இருவரும் எல்லா வற்றிலும் கருத்தொத்தே இல்லறம் நடத்த வேண்டும்.

66

'காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒருகருமஞ் செய்பவே ஓதுகலை

எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டும் ஒன்றையே காண்

என்பது நன்னெறி.

99

க.பெ.சி: 28 சிலை 2000

அனுப்ப வேண்டா

அறுவை மருத்துவச் செலவிற்கு வேண்டிய 300 உருபாவுள் நூற்றை முந்தியே அனுப்பிவிட்டீர். இனி 200 தான் தேவை. அதில் ஒரு நூற்றை முன்பணமாக அஞ்சல் வாயிலாக அனுப்பி வி ட்டு டு ஒரு நூற்றை நேரில் தரலாம். செலவு முன் போன்றே யிருப்பின் தரும் பணம் 50 உருபாத்தானிருக்கும்.

திருமணத்திற்கு நான் உறவு முறையில்தான் வந்தேன். ஆதலாற் போகவரச் செலவிற்குக் கொடுத்த 50 உருபா போதும். அன்றனுப்பிய நூறு ரூபாவை என் மருத்துவச் செலவிற்கு விடுத்த முன்பணமாகவே கருதி வைத்திருக்கின்றேன். அத் ெ தொகை இன்னும் என் கையிலுள்ளது. ஆதலால் இனி அஞ்சல் வாயிலாக இம்மாத இறுதியிலேனும் அடுத்த மாதத் தொடக்கத்திலேனும் நூறு ரூபா அனுப்பினாற் போதும்.