உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




366

பாவாணர் கடிதங்கள்

பாடல்கள்

உறுதமிழ் ஆர்வந் தம்மில் ஊற்றெடுத் தோடு மென்னும் செறுவரைச் சுட்டிக் காட்டுஞ் செந்தமிழ்ச் செல்வி யன்றோ. 135. பேணிய குலமு மன்றும் பெரும்பகை மொழியு நன்மை

காணுதல் குறிக்கோ ளாகக் கழிபல ஆண்டு நீண்ட மாணுறுங் கொள்கை யில்லா மாதிகை பலவு மாயச் சேணுறுங் காலும் நீடும் செந்தமிழ்ச் செல்வி அன்றோ! திருக்குறள் ஐந்து

136. எம்மதநூ லென்றே எவரும் வினவினுடன் எம்மதநூ லென்றே எவருந்தான் - செம்மனமாய்ச் சொல்லும் படியமைந்த சொற்பொருட் சீர்நிரம்ப ஒல்லுங் குறளென் றுரை.

137. தொல்காப் பியம்போலத் தொன்மொழியாம் செந்தமிழின் ஒல்காப் பெருமை உலகிற்குச் - சொல்வதற்கே உள்ள இலக்கியத்துள் ஓங்கும் ஒருதலையாம் வள்ளுவர் நூலென்ப வாய்த்து.

138. முன்னோர் பொருளும் மொழியும் முழுமணிசேர் பொன்னேபோற் போற்றுகெனப் பொற்குறளை - அந்நாள் இளங்கோ வடிகளுடன் எல்லாருங் கொண்டார்

வளம்பெற நீடுவா ழி.

139. நடுநிலை யில்லாத நால்வே றொறுப்பு

வடுமிகக் கூறும் வடநூற் - கெடுதிகண்டு வள்ளுவன் நன்கு வகுத்த நடுவறத்தைக் கொள்ளுக எங்கும் குறித்து.

140. இம்மையுள் இன்பமும் இல்லறத்தால் வீடுறவும் செம்மையால் எப்பாற்கும் செப்பிய - அம்மைதான் தேவன் தமிழத் திருவள் ளுவன்குறளே

மேவ நிலமிசையே மிக்கு.

-திருவள்ளுவர் திருநாள் விழா மலர், பக். 53.