உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

விறகுத் தலையன் முறையிற் சுமந்து வீட்டை யடைந்ததும் ஏட்டைப் பிரித்துச் சிதலரித் தனவும் சிதர்ந்து போனவும் மங்கி யிருந்தவும் மாறிக் கிடந்தவும்

பூச்சி துளைத்தவும் புலனா காதவும் பொறையும் பொறுமையும் புரிவிற் பொலியக் கங்குல் பகலாய்க் கண்ணொளி மழுங்கப் படித்துப் படிகள் எடுத்துத் திருத்தி

அருஞ்சொற் பொருளும் ஆராய்ச்சிக் குறிப்பும் முதற்குறிப்பு ரையுடன் முறையாய் அச்சிட் டுதவி யிலனேல் இதுகால் நாமும் பத்துப் பாட்டைப் பார்த்த லொண்ணுமோ? எட்டுத் தொகையும் எய்தல் இயலுமோ?

6

சிந்தா மணியொடு சிலம்பு மேகலை சிந்தை யிலேனும் சேரல் ஆகுமோ?

பிறபல நூலும் பெறுதல் கூடுமோ இத்தகை யோனை அத்தக நினைய ஊர்தொறும் உடவள வொண்பொற் சிலையும்

உள்ளந் தோறும் உயிருடைச் சிலையும்

நிறுவி யவன்வழி நிற்றல்

தகுவதே யன்றோ தமிழகத் தோரே

வழிமுறைப் பண்பு

234. செந்தமிழ் நாட்டுச் சிவகங் கைசேர்

மிதிலைப் பட்டி மேதக வாழ்ந்தே அழகிய சிற்றம் பலக்கவி ராயன் உறவினர் மணத்திற் கோரூர் சென்று மீண்ட காலை மூன்றுரு பாவும் பழையதுந் தரவே பாங்கா யிசைந்து வண்டி யொன்றை வாடகை பேசி இரவில் ஏறி விரைவில் வருகையில் வண்டிக் காரன் வாயிசை கேட்டு

381

உ.க.இ. 2, பக். 244-5.