உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

66

83

'அரசியல் தலைவர் கட்சித் தலைவர் தொடர்பிருத்தல் வேண்டா” (கஉ மடங்கள் 2000)

66

ஆட்சியைக் கைப்பற்றாமல் நாம் தனித் தமிழை வளர்க் கவோ வடமொழியினின்று தமிழை மீட்கவோ சின்ன பின்ன மாகச் சிதறிக் கிடக்கும் தமிழினத்தை மீண்டும் ஒன்று சேர்த்து முன்னேற்றவோ முடியவே முடியாது" (க கூ நளி 2000)

உ.த.க. வின் ஒரு பெருநோக்கம் உறுப்பினர் தொகையைப் பெருக்கி ஒழுங்காகக் கூட்டங்களை நடத்துவதென்று: தமிழை வடமொழியினின்று மீட்டுத் தூய்மையாக வளர்ப்பதே” (அ. மீனம் 2002)

"இருநாள் விழாவில் முதல் நாள் உ.த.க. ஆட்டை விழா, மறுநாள் தமிழ் விடுதலை மாநாடு. மொழியியல் மாநாடு என்ற உணர்ச்சியும் பொருளுமற்ற பெயர் வேண்டேன்" (5-7-72)

“உ.த.க. மக்களாட்சி முறைக்கு இடந்தரும் அமைப்பன்று என்பதை அடிநாளிலிருந்து சொல்லி வருகின்றேன்

உ.த.க. இன்னும் உண்மையான நிலையையடையவில்லை. அது, ஆட்சிக்குழுக் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்திக் கொண்டு தமிழ் நாட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பின் ஒரு போதும் உ.த.க. ஆகாது.

66

“முதற்கண் செ.சொ. பி. அ. முதலி மட்டுமின்றிச் சில வடமொழி ஆராய்ச்சி நூல்களும் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரவேண்டும். அதன்பின் தமிழ் திரவிடத் தாய் என்று திரவிட நாடுகளிற் சொற்பொலிவு வாயிலாக நாட்டவோ காட்டவோ படல் வேண்டும்.. இங்ஙனமே தமிழ் ஆரியத்தின் மூலமென்பதும் இந்திய நாட்டிலும் மேலை நாடுகளிலும் விளக்கப் பெறல் வேண்டும். இதற்காகவே என் மலையாள கன்னட தெலுங்கு இந்தி அறிவை வளர்த்து வருகிறேன். ஆங்கிலப் பேச்சாற்றலும் எழுத்தாற்றலுமின்றித் தமிழின் பெருமையை ய மேனாட்டார்க்கு அறிவிக்க வியலாது. பரோவும் எமனோவும் போன்ற மேலை மொழிநூலறிஞரோடு பேச்சிலும் எழுத்திலும் சொற்போர் நிகழ்த்த வேண்டியிருக்கும்.. பல் துறையிலும் தேர்ச்சிபெற்ற ஒரு கீழ்க்கலை நாகரிக விடைமுகமும் (Cultural Delegates) மேனாடும் கீழ்நாடும் செல்ல வேண்டியிருக்கும். மேலையறிஞர்தமிழின் உண்மை நிலையை ஒப்புக்கொள்ளும் நாள்தான் இந்தியப் பிராமணரும் ஒப்புக்கொள்வர். அன்று தான் உ.த.க. உண்மையான உ.த.க. ஆகும்