உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 52.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இரா. இளங்குமரன்

L

85

நாட்டில் (கன்னட நாட்டில்) வையாபுரிகள் நடுவில் இருந்து கொண்டு ஓர் அரசினர் மகளிர் கல்லூரியில் தன்னந்தனியான தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் ஒருவர் தம் நெருக்க மான வேலைகட்கிடையே போதிய பணவுதவியுமின்றி ஒரு தனித் தமிழ் இதழை நடத்தி வருவது அரிதும் பெரிதும் பாராட்டத் தக்கதுமாகும். ஆதலால், அவர் சிறிதும் தளர்ச்சியுறாவண்ணம் அவரை மேன்மேலும் ஊக்கிவருவது உண்மைத் தமிழர் அனைவர் தலைமேலும் விழுந்த தலையாய கடமையாகும். இனிமேல் டை இடை என் கட்டுரைகளும் மீட்போலையில் வெளிவரும். அடுத்த ஆண்டுமுதல் இதழ்தோறும் வெளிவரும் . இதழ் மிக விரிவடைந்து சுவடி வடிவும் பெறும்.

இங்ஙனம், ஞா. தேவநேயன்.

தென்மொழி என்னும் தனித்தமிழ் மாதிகையே முதற்கண் உ.த.க. செய்திகளைத் தாங்கி வந்தது.. பின்னே தென்மொழி (1970) உ.த.க. இதழாக வெளிப்பட்டு இடையறவு படவே, மீட்போலை தோற்றமுற்றது (1979) என்பன எண்ணத்தக்கன.

கொள்கை தழ்கள் குருதியோட்டமின்றி நின்று படுவானேன்; மூச்சுத் திணறிச் சாய்ந்துபடுவானேன்! கொள்கை யோட்ட முழக்கம் வாயளவில் வாளா ஒழிந்துபடுவதுதான் கரணியமா? முரண் வழியிலே சிந்தித்தல் முட்டுக்கட்டையை ஒழிப்பது இல்லை! அரண்வழியிலே சிந்தித்தலே ஆக்கத்திற்கு வழிமுறை!

உ.த.க. முடுக்கமின்மையோ, முடங்கிக்கிடப்போ, முளைப் புத்திறமோ உ.த.க.வைப் பொறுத்ததேயன்றி, அப்பாற்பட்ட வரைப் பொறுத்ததில்லையாம்!

பாவாணர்க்காக இல்லையெனினும் தனித்தமிழாக்கத் திற்காக வேனும் உ.த.க.வின் உயிரோட்டத் தொண்டு வேண்டும்! உணர்வாளர் ஒன்றுபட்டுழைப்பரா?