சிதைநிலைப் படலம்
109
பண்டையேட்டுச் சுவடிகளும், மதுரைத் தமிழ்க்கழகக் கட்டடத்தில் தீக்கிரையாயின.
iv. நூலிழிபு
கலையும் அறிவியலும் பற்றாது குலமும் புகழும் காமமுமே பற்றிய நூல்கள் பிற்காலத்தெழுந்தன.
V. செய்யுளிழிபு
(1)
நேர்பு நிரைபு என்னும் உரியசைகள் வழக்கற்றமை.
(2) பாவகை குன்றிப் பாவினம் பயின்றமை.
(3) வடசொற் றொகை வரவர மிக்கமை.
(4) பொருட்சிறப்பினும் சொற்சிறப்பே சிறந்தமை.
(5)
சிறப்புப்பொருட் சொற்கள் மோனையெதுகைபற்றிப் பொதுப் பொருளில் ஆளப்பெற்றமை.
(6) இயற்கையையும் உண்மையையும் கற்பனை மேற்கொண் டமை. செய்யுளில் உயர்வுப்பன்மை புக்கதும் இழிபே.
L
vi. இலக்கணக் கேடு
(1)
முத்தமிழாயிருந்த இலக்கணம்
தமிழாகக்குன்றல்.
இயல் என்னும் ஒரு
எழுத்தும்
(2) பிண்டமாயிருந்த இயற்றமிழிலக்கணமும் சொல்லுமாகக் குன்றல்.
(3) வடமொழியிலக்கணத்தை வலிந்தும் நலிந்தும் தமிழுக்குப் பொருத்தி வீரசோழியம், பிரயோகவிவேகம் முதலிய புன்னூல்கள் எழுந்தமை.
(4) எழுத்துகட்கும் பாக்கட்கும் தெய்வமும் குலமும் வகுக்கப் பட்டமை.
பன்னீ ருயிரெழுத்துகளையும் நான்முகன் (பிரமன்) படைத் தான், பதினெண் மெய்யெழுத்துகளையும் சிவன், திருமால், முருகன், வேந்தன் (இந்திரன்), கதிரவன், திங்கள், குபேரன், கூற்றவன், வருணன் ஆகிய ஒன்பதின்மரும் முறையே இவ்விரண்டாகப் படைத்தனர்.
நான்முகன், சிவன், திருமால், முருகன் ஆகிய நால்வரும் படைத்த எழுத்துகள் பிராமணருக்குரியவை; வேந்தனும் கதிரவனும் திங்களும் படைத்தவை அரசர்க்குரியவை; குபேரனும் வருணனும் படைத்தவை வணிகர்க்குரியவை; கூற்றுவன் படைத்த இரண்டும் சூத்திரர் என்னும் வேளாளர்க்குரியவை.