சிதைநிலைப் படலம்
இலக்கணக் குறியீடுகள்
111
முதனிலை-பகுதி, ஈறு-விகுதி, புணர்ச்சி-சந்தி, திரிபு-விகாரம், கிளவி-பதம், பெயர்-நாமம், வினைமுதல் (எழுவாய்)-கர்த்தா, மடக்கு-
யமகம்.
செய்யுட்பெயர்கள்
பா (செய்யுள்)-கவி, பாட்டு-காதை, மணடிலம்-விருத்தம், இதழ்குவி பா-ஓட்டியம், இதழகல் பா-நிரோட்டியம், ஈறுதொடங்கி- அந்தாதி.
பனுவற்பெயர்கள்
பனுவல்-பிரபந்தம், வனப்பு-காவியம், ஐந்து-பஞ்சும், நூறு (பதிற்றுப்பத்து)-சதகம்.
கடுமை, இனிமை, மிறை, அகலம்-ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம். மதுரம் சித்திரம் என்பன கடன்கொண்ட தென்சொல்லெ. த்தாரம்.மதுரம்
(10) அன்றோ என்னும் ஒன்றன்பாற் சொல்லும், அல்ல, அல்லவா என்னும் பலவின்பாற் சொற்களும், மூவிட ஐம்பாற் பொதுவாய் வழங்கிவருகை.
vii சொற்சிதைவு
(1) சொல்லிறப்பு
இறந்துபட்ட சொற்கள் பல்லாயிரக் கணக்கின.
(2) சொல்வழக்கழிவு
அறம் (தருமம்), ஆவு (பசு), இசிவு (ஜன்னி), ஈளை (காசம்), உகிர் (நகம்), ஊர்தி (வாகனம்), ஐயம் (சந்தேகம்), ஓதிமம் (அன்னம்), கலங்கரை விளக்கம் (Light-house), கழுவாய் (பிராயச் சித்தம்), கூற்றுவன்(யமன்), சுடலை (மயானம்), திருச்சுற்று (பிராகாரம்), திரையல்(பீடா), நீகான் (மாலுமி), பலகணி (ஜன்னல்), பொழுது வணங்கி (சூரியகாந்தி), மறை (வேதம்), முதுசொம் (பிதிரார்ஜிதம்), வலக்காரம்(தந்திரம்), வாய்நேர்தல்(வாக்களித்தல்) முதலிய நூற்றுக்கணக்கான சொற்கள் வழக்கிறந்துள்ளன.
(3) சொற்பொருளிழப்பு
எ-டு: உயிர்மெய் (பிராணி), தோள் (புஜம்)
(4) சொல்லிழிபு
எ-டு: சோறு, தண்ணீர், பருப்புக்குழம்பு, மிளகுநீர்.