உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

தமிழ் மரபுரை





6

வருநிலைப் படலம்

முற்காலத்தில் தமிழைக் கெடுத்தவர் பல்வேள்விச் சாலை முதுகுடுமிப் பெருவழுதியும், சோழன் அரசவேள்வி வேட்ட பெருநற்கிள்ளியும், சேரமான் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் போலும் மூவேந்தர்; இக்காலத்தில் தமிழைக் கெடுப்பவர் முத்தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்.

தமிழைக் கெடுக்கும் தமிழ்ப்புலவர், வாள்போற் பகைவரும் கேள்போற் பகைவரும் ஆக இருசாரார். இவர் தமிழ் வரலாற்றையும் தமிழ்ச்சொல் வளத்தையும் அறியாததனால், அவற்றை அறிந்தவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலிச் சீர்திருத்தமும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பும்

செய்யவிடாது தடுக்க, ஒரு கெடுதலைச் சூழ்ச்சிக் கூட்டாகக் கூடியுள்ளார். இவ்விரு சாராருள், முன்னவர் வடமொழியடிப் படையில் தமிழ் கற்று வண்ணனை மொழிநூலைக் கையாள்பவர்; பின்னவர் அவருடன் ஒத்துழைப்போரும் அங்குமிங்கு மிருப் போருமாக மூவகையர்.

செந்தமிழைக் காக்கவேண்டுமெனின், இவ் விருசார்த் தமிழ்ப் பகைவரையும் புறக்கணித்தல் வேண்டும்.

வடமொழி தமிழைத் தாழ்த்தித் தொன்றுதொட்டு அதற்குரிய அரியணையில் தான் இருந்துவருவதால், அதனைத் தாக்காது தமிழைக் காக்க முடியாது. வடமொழியைத் தாக்காதே தமிழை வளர்க்கவேண்டுமென்பார் வரலாற்றை அறவே அறியாதார். வடமொழிக்கும் தமிழுக்கும் இடைப்பட்ட உறவுநிலை, வழக் காடிக்கும் எதிர்வழக்காடிக்கும் அல்லது தாக்குவோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்டதாகும். எங்ஙனம் ஒரு வழக்காடி தன் எதிர்வழக்காடியைத் தாக்காது தன் வழக்கில் வெல்ல முடியாதோ, அங்ஙனமே தமிழையும் வடமொழியை விலக்காது அல்லது அதன் உயர்வொழிக்காது வளர்க்க முடியாது.

தமிழை ஆரியத்தினின்று மீட்டற்கும் காத்தற்கும் வளர்த் தற்கும் செய்யவேண்டிய பணிகள், உள்நாட்டிற் செய்வனவும் வெளிநாட்டிற் செய்வனவுமாக இருதிறப்படும்.