உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இயனிலைப் படலம்

ஆவது

9

ஒருவனுக்குத் தன்மதியாவது சொன்மதியாவது இருத்தல்வேண்டும்.

எனினும் - செல்வரெனினும் வறியவரெனினும் இச்சத்திரத்தில் வந்து தங்கலாம்.

எனினும் - ஏனும்

'செந்தமிழ்ச் செல்விக்’குக் கட்டுரையேனும் செய்யுளேனும் எழுதி விடுக்க.

ன்றோ

றோ நாளையோ மழை தப்பாது வரும்.

ஆயினும், ஆகிலும், ஆதல், ஆவது, ஏனும் என்னும் ணைப்புச் சொற்கள், யார், ஏது முதலிய வினாப்பெயரின்பின் வரின், ஒரே முறை அமையும்.

எ-டு: யாராகிலும் ஒருவர் வருக. ஏதேனும் ஒன்று கொடு.

உடனுற விணைப்புச்சொற்கள் (Correlative Conjunctions):

மட்டுமன்று......உம்.-எடு: இக்காலத்தில் ஒருவர் ஏந்தாக (வச தியாக) வாழவேண்டுமெனின், தமிழை மட்டுமன்று, ஆங்கிலத்தையும் கற்கவேண்டும்.

ஆக என்னும் சொல் நேரல்கூற்றை (Indirect Speech) முடிக்குஞ் சொல்லோடு இணைக்கும்.

எ-டு: அவன் நாளை வருவதாகச் சொன்னான்.

(4) பல்பொரு ளிடைச்சொற்கள்

ஆ.- இது சுட்டு, வினா, எதிர்மறை, இரக்கம், வியப்பு, நோவு, முதலிய பல பொருள்களை உணர்த்தும்.

உம்.

விளி

இது இணைப்பு, உயர்வு, இழிவு, எதிர்மறை, எச்சம், முற்று, உகப்பு (choice), இசைநிறை முதலிய பலபொருள்களை உணர்த்தும். உரைநடைக்கும் சிறுபான்மை இசைநிறை வேண்டப்பெறும்.

எ-டு: பெரும்பாலும், பொதுவுடைமைக்காரர்

கடவுள்

நம்பிக்கை யில்லாதவரே.

ன்

தன்மகன் கலைத்தலைவன் தேர்வில் முதற்றரமாய்த் தேறினானென்று கேள்விப்பட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தாள்.