உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

தமிழ் வரலாறு

"கக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே யுள.

99

"சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

99

"நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி

99

தானல்கா தாகி விடின்.

(527)

(195)

(17)

என்னும் குறள்களை நோக்குக.

நீர் = நீரின் குளிர்ந்த தன்மை, தன்மை. நீர்மை = சிறந்த தன்மை தன்மை. மை = கருமுகில், மழைநீர், நீர்.

நீர், மை என்னும் இருசொல்லும் பண்புப்பெயரீறானபின், நீர் என்னும் சொல்லும் தன்மை யென்னும் பொதுப்பண்புப் பெயர் போல் மையீறு பெற்றதென்க.

தொழிற்பெய ரீறுகள்

தொழிற்பெயர் வகைகள்

(1) முதனிலைத் தொழிற்பெயர். எ-டு: அடி, கட்டு.

(2) முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

எ-டு: உண் - ஊண், புறப்படு - புறப்பாடு, கூப்பிடு கூப்பீடு - கூப்பாடு.

(3) முதனிலை வலித்த தொழிற்பெயர்.

எ-டு: விரும்பு - விருப்பு, நீந்து - நீத்து.

(4) முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர். எ-டு: கருது, கருத்து, பேசு-பேச்சு.

(5) முதனிலை ஈறுபெற்ற தொழிற்பெயர்.

எ-டு: செய்கை, படிப்பு.

(6) முதனிலை நீண்டு ஈறுபெற்ற தொழிற்பெயர். எ-டு: நடி- நாடகம், படி-பாடம்.

-

(7) முதனிலை வலியிரட்டித்து ஈறுபெற்ற தொழிற்பெயர். எ-டு: ஆடு-ஆட்டம், ஆகு-ஆக்கம்.

ஆட்டம், ஆக்கம் என்பன ஆடுதல், ஆகுதல் என்று பொருள் படுங்கால், தன்வினையடிப் பிறந்தவையே.