இயனிலைப் படலம்
"பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல்.
66
57
99
(442)
'இன்ன தின்னுழி யின்னணம் இயலும் என்றிசை நூலுட் குணகுணிப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலாம்
நல்லோர் உரிச்சொலில் நயந்தனர் கொளலே"
என்னும் நன்னூல் நூற்பாக்களும் வலியுறுத்தும்.
(460)
ன்னும் இதன் விரிவை, என் ‘தொல்காப்பிய விளக்கம்’
என்னும் நூலிற் காண்க.
(5) ஐவகைச் சொன்னிலை
1.
அசைநிலை (Isolating or Monosyllabic Stage)
எ-டு: இல், ஆள்.
2. புணர்நிலை (Compounding Stage)
3.
எ-டு: இல்-ஆள்.
பகுசொன்னிலை அல்லது ஈறுபேற்ற நிலை (Inflexional Stage) எ-டு: இல்லாள்.
4. கொளுவுநிலை (Agglutinative Stage)
எ-டு: செய்விப்பி.
5. தொகைநிலை (Synthetic Stage)
எ-டு: மக+கள்=மக்கள், தம்+ஆய்=தாய், ஆதன்+தா=ஆந்தா- ஆந்தை.
(6) சொற்படை வளர்ச்சி
நிலம் ஒன்றன்மே லொன்றாய் அடுக்கப்பட்டிருக்கும் பல படை களாய் அமைந்திருப்பதுபோல், சொற்களும் ஒன்றன்மே லொன்றாய் வளர்ந்துள்ள எழுத்துகளும் அசைகளுமாகிய பலபடைகளைக் கொண்டுள்ளன.
எ-டு:
1. சொன்னீட்சி
அ-அல்-அது-அந்து-அந்த-அந்தா
உ-உம்-உம்பு-உம்பர்-உம்பரம்
உ-உம்-அம்-அம்பு-அம்பல்-அம்பலம்
உ-உல்-உள்-உடு-உடல்-உடன்-உடம்பு