60
தமிழ் மரபுரை
60
ல-த, போலி. ஒ.நோ: சலங்கை-சதங்கை.
லொளுலொளு
என்பதை நொளுநொளு
தமிழ் வரலாறு
என்பதும்,
லொள்லொள் என்று குலைக்கும் நாயை ஞெள்ளை என்பதும்,
அஃதே.
டகரமுதல் தகரமுதலாக எழுதப்படும்.
எ-டு:
L டவண்டை-தவண்டை (ஒருவகைப் பறை).
அவரை, துவரை, பனை, மலை முதலிய சொற்களின் ஐகாரவீறு, அகரவீற்றின் பண்படுத்தத் திரிபாயிருக்கலாம்.
2. சொற்களைப் பொருட்கேற்ப வேறுபடுத்தல்.
எ-டு:
தலையன், தலைவன், தலைச்சன், தலையாரி, தலைகாரன். கடிய, கடக்க; கடிதல், கடித்தல்; கடிந்தான், கடித்தான். கடிதல்=நீக்குதல். கடித்தல்=பல்லால் வெட்டுதல். வெள்கு-வெட்கு, வெள்கு-வெஃகு. வெட்குதல்=நாணுதல்,வெஃகுதல்=பிறர்பொருளை
விரும்புதல்.
நீர்நிலையைக் குறிக்கும் ஆறு என்னும் சொல்லை வேற் றுமைப் புணர்ச்சியில் வலியிரட்டித்தலும், எண்ணைக் குறிக்கும் ஆறு என்னும் சொல்லை அங்ஙனம் இரட்டிக்காமையும், பண் படுத்தத்தின் பாற்பட்டதே.
திரிபு புணர்ச்சியால் மகன்மை குறித்தல்
கீரன்+கொற்றன்=கீரங்கொற்றன் (கீரன் மகனாகிய கொற்றன்) கண்ணன்+சேந்தனார்=கண்ணஞ்சேந்தனார் (கண்ணன் மகனாகிய சேந்தனார்)
பிட்டன்+தத்தன்=பிட்டந்தத்தன் (பிட்டன் மகனாகிய தத்தன்)
இவற்றில், நிலைமொழியீற்று னகரமெய், வருமொழிமுதல் வல்லின மெய்க்கு இனமெல்லினமாய்த் திரிதல் காண்க. வடுகஞ் சாத்தன் என்பது வடுகச்சாத்தன் என்று வலிப்பின், வடுகன் மகனாகிய சாத்தன் என்று பொருள்படாது, வடுகன் (தெலுங்கன்) ஆகிய சாத்தன் என்றே பொருள்படும்.
(9) சொற்றூய்மை
தமிழ் தானே தோன்றிய பெருவளத் தாய்மொழியாதலின், சொற்றூய்மை அதன் சிறந்த பண்புகளுள் ஒன்றாம். அதனால், பண்டைத் தமிழர் அதைக் கண்ணுங்கருத்துமாய்ப் பேணி, அயல்