உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தமிழ் மரபுரை





68

ரு

தமிழ் வரலாறு

பொருளை அகம், புறம் என இருபாலாய் வகுத்து அவ் விரு பாற்குள்ளும் எல்லாப் பொருள்களையும் தம் நுண்மாண் நுழை புலத்தால் வியக்கத்தக்க முறையில் அடக்கியிருக்கின்றனர். இப் பொரு ளிலக்கணமே, பண்டைப் புலவரையும் புலமைமிக்க இறைவனடி யாரையும் இன்பக்கடலுள் ஆழ்த்தியது. குமரிக் கண்டப் பொதுமக்கள் மொழியமைப்பில் தம் நுண்ணுணர்வைப் புலப்படுத்தியிருப்பது போன்றே, புலமக்களும் பொருளிலக் கணத்தில் தம் நுண்மதியைச் சிறப்பக் காட்டியுள்ளனர். ஆயின், இதை இக்காலப் புலவர் காதற்சிறப்பையும் போர்த்திறத்தையுமே விளக்குவதாகப் பிறழ வுணர்ந்துள்ளனர். இதன் விரிவான விளக் கத்தை என் 'தொல்காப்பிய விளக்கம்' என்னும் நூலிற் காண்க.

வெண்பா, ஆரிசியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் தலைசிறந்த செய்யுள் வகைகளைக் கண்டு, யாப்பிலும் தமிழை ஒப்புயர்வற்ற தாக்கியுள்ளனர் பண்டைத் தமிழ்ப்புலவர்.

மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவு, திணை, கைகோள், கூற்று, கேட்போர், களன், காலம், பயன், மெய்ப்பாடு, எச்சம், முன்னம், பொருள், துறை, மாட்டு, வண்ணம் என்னும் இருபத்தாறு றுப்புகளைக்கொண்டு; பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் (பழமொழி) என்னும் எழுநிலத்தெழுந்த நால்வகைச் செய்யுள்களாலான; அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு இழைபு என்னும் எண்வகை வனப்புகளை (காவியங்களை), கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்னரே, முதன்முதலாக உலகில் இயற்றியவர் குமரிக்கண்டத் தமிழ்ப்புலவர். அவர் செய்யுளிற் பேச்சுவன்மையும் பெற்றிருந்தனர். அறிவிலும் ஆற்றலிலும் அவரையொத்தவர் இக்காலத் தொருவருமில்லை. இந்நாளைத் தலைசிறந்த பாவலரும், பண்டை நல்லிசைப் புலவரை நோக்க, பாணரும் புல்லிசைப் புலவருமே (Bards and Poetasters) - இற்றைத் தமிழ்ப் புலவரோ குமரிக்கண்டப் பொதுமக்கட்கும் ஈடாகார்.

செய்யுள் சிறந்த கலமாகவும் அதன் பொருள் சிறந்த அமுதாகவும் கருதப்பெற்றதினால், வேறெம்மொழியிலு மில்லாத பொருளிலக்கணம், தமிழிலக்கணத்தின் கொடுமுடியும் முடி மணியும் முதிர் விளைவும் உயிர்நாடியும் தமிழனின் தனிப்பெரும் பெருமையும், ஆகக் கொள்ளப்பெற்றது.

7. தலைக்கழகம் (தோரா-கி.மு. 10,000-5500)

தமிழ் மக்கள் மொழித்துறையிலும் இலக்கியத்துறையிலும் மிக வுயரிய நிலையடைந்திருந்ததனாலும், தமிழ்வாயிலாய்க் கல்வியைப்