உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 6.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




திரிநிலைப் படலம்

73

கொடுந்தமிழ்ச் சொற்கள் பொதுவாய்ப், பொருள் திரிந்த சொல், வடிவுதிரிந்த சொல், ஒலிதிரிந்த சொல், செந்தமிழில் வழக் கற்ற சொல், புதுச்சொல் என ஐவகைப்படும்.

எ-டு:

தமிழ்

செப்பு = விடைசொல்

போயினான்

செய், கும்பு

வெதிர்

தெலுங்கு

செப்பு(சொல்)-பொருள் திரிந்த

சொல்

போயினாடு-வடிவுதிரிந்த சொல்

cey, gumpu-ஒலிதிரிந்த சொல் வெதுரு-செந்தமிழில் வழக்கற்ற

சொல்

சதுவு, வெள்ளு-புதுச்சொல்.

புதுச்சொல்லை, வேர் மறையாச் சொல், வேர் மறைந்த சொல்

என இருவகைப்படுத்தலாம்.

எ-டு:

அள் (காது)

அம்மு (to sell)

அடுகு-வேர்மறையாச் சொல்

வேர்மறைந்த சொல்

இனி, இற்றைத் தமிழில் வழக்கற்றுத் தெலுங்கிற் புதுச்சொற் போல் தோன்றுவனவற்றிற் கெல்லாம் வேர்ச்சொல் குமரிநாட்டில் வழங்கின என்று கொள்ளவும் இடமுண்டு.

தலைக்கழக அழிவும் இடையீடும்

தோரா. கி.மு. 4500 போல், பாண்டியன் கடுங்கோன் காலத்தில், அரபிக்கட லுள்ளவிடத்து நிலப்பகுதியும், நாவலந் தீவின் தென் பகுதியான குமரிக்கண்டமும் கடலுள் மூழ்கின. வங்காளக் குடாக் கடலினும் அரபிக்கடல் முந்தியதாகும். அதனாலேயே, கடல் தெய்வமாகிய வாரணனை மேற்றிசைத் தலைவன் என்றும், வங்காளக் குடாக்கடலைத் தொடுகடல் என்றும் கூறினர்.

66

“குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்

99

(புறம்.6)

தலைக்கழகத்தைப் புரந்த பாண்டியர் எண்பத்தொன்பதின்மர் என்றும், அக் கழகத்தின் இறுதிக்காலப் புலவர் ஐந்நூற்று நாற்பத் தொன்பதின்மர் என்றும் இறையனார் அகப்பொருளுரை கூறும்.

பெரு(முது)நாரை, பெருங்(முது)குருகு, களரியாவிரை முதலிய நூல்கள் தலைக்கழகத்தால் இயற்றப்பெற்றனவாகச் சொல்லப் பெறும்.